விவோ Y91i, 16 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.7,990க்கும், 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.8,490க்கும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே இந்த போன் விற்பனை செய்யப்படும் நிலையில் ஆன்லைன் கடைகளில் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த வெள்ளிகிழமையன்று விவோ நிறுவனம் சார்பில் Y91i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது கடைகளில் மட்டுமே விற்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போனின் சிறப்பம்சமாக 6.22 இஞ்ச் ஹெச்டி திரை மற்றும் மீடியாடெக் ஹீலியோ P22 SoC மென்பொருள் கொண்டு இயங்குவதால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
விவோY91i ஸ்மார்ட்போனின் விலை (இந்தியா):
விவோY91i போனின் 16 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.7,990க்கும், 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.8,490க்கும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. ஃப்யூஷன் ப்ளாக் மற்றும் ஓஷன் ப்ளூ நிறங்களில் விவோவின் இந்தப் புதிய தயாரிப்பு வெளியாகியுள்ளது.
ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே இந்த போன் விற்பனை செய்யப்படும் நிலையில் ஆன்லைன் கடைகளில் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விவோவின் விவோY91 மாடல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வெளியானது. தற்போது விலை சரிந்து ரூ.9,990க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விவோY91i ஸ்மார்ட்போனின் அமைப்புகள்:
அண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஃபன்டச் ஓஎஸ் 4.5 மென்பொருளையும் பெற்றுள்ளது. 6.22 இஞ்ச் ஹெச்டி திரைகொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹூலியோ P22 SoCயால் பவரூட்டப்பட்டுள்ளது.
2ஜிபி ரேமுடன் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன், 13 மெகா பிக்சல் பின்புற கேமராவையும் 5 மெகா பிக்சல் சென்சாரை கொண்ட செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளன. இத்துடன் ஃபேஸ் ப்யூட்டி, வாய்ஸ் கன்ட்ரோல் மற்றும் 16/32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த விவோ Y91i ஸ்மார்ட்போன், 4,030mAh பேட்டரி பவருடன் வெளியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter