இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ரூ.10,990க்கு அறிமுகமான விவோ Y91!
இந்த போனில் இரண்டு பின்புற கேமராக்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான விவோ Y91 ஸ்மார்ட்போனின் விலை 1000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.10,990க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.9,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை குறைப்பால் தனது போட்டியாளர்களான சியோமி மற்றும் ரியல்மி போன்களுக்கு போட்டியாக விவோ Y91 ஸ்மார்ட்போன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை குறைப்பு அமேசான், பேடிஎம் ஆகிய தளங்களில் எதிரொலிக்கும். இந்தியாவில் விவோ Y91 கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான நிலையில், இந்த திடீர் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விவோ Y91 அமைப்புகள்:
விவோ Y91 ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஃபன்டச் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. 6.22 இஞ்ச் ஹெச்டி திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 'வாட்டர் டிராப்' ஸ்டையில் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. மேலும் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பிராசஸரை கொண்டுள்ளது இந்த போன்.
இரண்டு பின்புற கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள நிலையில், அவைகளில் ஓன்று 13 மெகா பிக்சல் சென்சாரையும் மற்றொன்று 2 மெகா பிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது. முன்புறத்தில் இருக்கும் செல்ஃபி கேமராவைப் பொறுத்தவரை 8 மெகா பிக்சல் கேமரா இடம் பெற்றுள்ளது.
மேலும் இதர வசதிகளான போர்டிரேட் மோட், ஃபேஸ் ஆன்லாக்கிங் வசதி போன்ற பல வசதிகள் இந்த போனில் உள்ளன. 32ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் 4,030mAh பேட்டரி வசதியைப் பொற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter