சுமார் ரூ. 6,990 என்ற விலையில் இந்த 'விவோ Y90' ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ Y90 5 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.
'விவோ Y90' ஸ்மார்ட்போன் பாக்கிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய விவோ Y-தொடர் ஸ்மார்ட்போனில் வாட்டர்ட்டாப்-ஸ்டைல் நாட்ச், ஒற்றை பின்புற கேமரா அமைப்பு மற்றும் மேட்-போன்ற பின்புற பேனல் ஆகியவை உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 6.22-இன்ச் HD+ திரை, ஹீலியோ A22 எஸ் ஓ சி ப்ராசஸர், ஒற்றை 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, 4,030mAh பேட்டரி மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. சுமார் ரூ. 6,990 என்ற விலையில் இந்த 'விவோ Y90' ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொலைபேசி பாகிஸ்தானில் இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'விவோ Y90' விலை!
இந்த ஸ்மார்ட்போன் 18,999 பாகிஸ்தான் ரூபாய் (சுமார் 8,100 இந்திய ரூபாய்) என்ற விலையில் பாக்கிஸ்தானில் அறிமுகமாகியுள்ளது. கருப்பு (Black) மற்றும் தங்கம் (Gold) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த 'விவோ Y90' ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ரூ. 6,990 என்ற விலையில் அறிமுகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
'விவோ Y90' சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஃபன்டச் OS 4.5-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ அமைப்பை கொண்டுள்ளது. 6.22-இன்ச் HD+ (720x1520 பிக்சல்கள்) திரையையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஹீலியோ A22 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. 2GB RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 32GB சேமிப்பு அளவையும் கொண்டுள்ளது. 512GB வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
ஒற்றை பின்புற கேமரா அமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 8 மெகாபிக்சல் அளவிலான பின்புற கேமராவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
4,030mAh அளவு பேட்டரி பொருத்தப்பட்டு வெளியாகியுள்ளது இந்த ஸ்மார்ட்போன். வை-பை, GPS, ப்ளூடூத் 5 ஆகிய வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், மைக்ரோ USB போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. 155.11x75.09x8.28mm என்ற அளவுகளை கொண்ட இந்த Y90 163.5 கிராம் எடையை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Z TriFold Price Said to Be Lower Than Previously Anticipated