Photo Credit: Facebook / Vivocambodia
விவோ ஒய் 50 ஸ்மார்ட்போன் கம்போடியாவில் அறிமுகமாகியுள்ளது. ஸ்மாட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி யூனிட்டிற்கான முன்பதிவு இப்போது நேரலையில் உள்ளது.
Vivo Y50, இன்று முதல் ஏப்ரல் 11 வரை, 249 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,950)-க்கு முன்பதிவு செய்யலாம். இந்த போன் ஸ்டாரி பிளாக் மற்றும் ஐரிஸ் ப்ளூ கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
Vivo Y50, 6.53 அங்குல முழு எச்டி + டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த போன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் வழங்கப்படும். இதில், குவாட் கேமரா அமைப்பிற்கு அடுத்த பின்புற பேனரில் கைரேகை ஸ்கேனரையும் காணலாம். இருப்பினும், புதிய Vivo Y50-யில் பயன்படுத்தப்படும் பிராசசரை நிறுவனம் குறிப்பிடவில்லை. இருப்பினும், ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் ஸ்னாப்டிராகன் 665 SoC-யால் இயக்கப்படுகிறது என்று டிப்ஸ்டர் சுவன்ஷு அம்போர் ட்விட்டர் பதிவில் கூறினார்.
போனின், பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்சல் உருவப்படம் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். முன்புறத்தில், மேல் இடது மூலையில் ஒரு ஹோல்-பஞ்சில் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. Vivo Y50, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. பிற தகவல்கள் எதுவும் இப்போது தெரியவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்