விரைவில் விற்பனைக்கு வருகிறது விவோ Y30! விலை தெரியுமா?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
விரைவில் விற்பனைக்கு வருகிறது விவோ Y30! விலை தெரியுமா?

விரைவில் விற்பனைக்கு வருகிறது விவோ Y30! விலை தெரியுமா?

ஹைலைட்ஸ்
 • Vivo Y30 may soon launch in India
 • It is said to be priced at Rs. 14,990
 • Vivo Y30 was originally launched in Malaysia last month

விவோ Y30 விரைவில் இந்திய சந்தைக்கு வர உள்ளதாக பெரிய சில்லறை விற்பனையாளரான மகேஷ் டெலிகாம் தெரிவித்துள்ளது. இந்த தொலைபேசி மே மாத தொடக்கத்தில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது விவோ Y30 இந்தியாவிலும் கிடைக்கும் என்று தெரிகிறது. சில்லறை விற்பனையாளரும் தொலைபேசியின் விலையை பகிர்ந்து கொண்டார், இது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.15,000 ரூபாய் ஆகும். இந்திய வெளியிட்டிற்கான சரியான தேதி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், சில்லறை விற்பனையாளர் அது “விரைவில்” நடக்கும் என்று கூறுகிறார்.

இந்தியாவில் விவோ Y30 விலை (எதிர்பார்க்கப்படுகிறது)

விவோ Y30 இன் இந்திய வேரியண்ட், மும்பையைச் சேர்ந்த ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாமின் ட்வீட்டின் படி, 4ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பிற்கு ரூ.14,990 ஆகும். இந்த தொலைபேசி முதலில் மலேசியாவில் MYR 899க்கு ஒற்றை வேரியண்டில் (4ஜிபி + 128 ஜிபி) அறிமுகப்படுத்தப்பட்டது தோராயமாக ரூ.15,800 ஆகும். விவோ Y30 டாஸ்ல் ப்ளூ மற்றும் மூன்ஸ்டோன் ஒயிட் கலர் விருப்பங்களில் வந்தது.

கிடைப்பதைப் பொறுத்தவரை, மகேஷ் டெலிகாமின் ட்வீட் குறிப்பாக எந்த தேதியையும் குறிப்பிடவில்லை, ஆனால் அது விரைவில் வரும் என்று கூறுகிறது.

விவோ Y30 சிறப்பம்சங்கள்

டூயல் சிம் (நானோ) விவோ Y30 ஆண்ட்ராய்டு 10 ஐ ஃபன்டூச் ஓஎஸ் உடன் இயக்குகிறது. இது 6.47 இன்ச் எச்டி + (720x1,560 பிக்சல்கள்) டிஸ்ப்ளே 19.5:9 விகிதம் கொண்டுள்ளது. இந்த போன் 4ஜிபி ரேம் உடன், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி 6765) மூலம் இயக்கப்படுகிறது.

விவோ Y30ல் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது, இதில் எஃப்/2.2 லென்ஸுடன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் எஃப்/2.2 லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் f/2.4 லென்ஸுடன், இறுதியாக, ஒரு f/2.4 கொண்ட மற்றொரு 2 மெகாபிக்சல் சூட்டரும் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, விவோ Y30ல் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.

விவோ Y30 இல் 128 ஜிபி உள் சேமிப்பு உள்ளது. இணைப்பிற்கு, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, உள்ளது. பின்புறத்தில் கைரேகை ஸ்கேனரும் உள்ளது. விவோ Y30 5,000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.


Is Mi Notebook 14 series the best affordable laptop range for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. WhatsApp Update: இனி ஷேர் சாட் வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்!
 2. Samsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு! கேஷ்பேக் ஆஃபரும் அறிவிப்பு!!
 3. சாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம்! விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ!
 4. PUBG Update: பீட்டா வெர்ஷனில் Erangel 2.0 மேப் அறிமுகம்!
 5. Whatsapp Update: புதிதாக வரவுள்ள செர்ச் ஆப்ஷன், எக்ஸ்பைரி மெசேஜ் வசதிகள்!
 6. Xiaomi சுதந்திர நாள் சிறப்பு விற்பனை: ரெட்மி K20 Pro ஸ்மார்ட்போனுக்கு ரூ.4,000 தள்ளுபடி!
 7. Mi TV Stick அறிமுகம்..! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.!!
 8. வாட்ஸ்அப்பில் பிரவுசிங் அறிமுகம்! இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!
 9. Redmi 9 Prime அறிமுகம்! பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட்போன்!!
 10. நான்கு கேமராக்களுடன் Realme V5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com