64GB ஸ்டோரேஜ் கொண்ட Vivo Y3 அறிமுகம்!

Vivo Y3-யின் 64GB ஸ்டோரேஜின் விலை CNY 999 (சுமார் ரூ. 10,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

64GB ஸ்டோரேஜ் கொண்ட Vivo Y3 அறிமுகம்!

6.35-inch HD+ டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது Vivo Y3

ஹைலைட்ஸ்
  • Vivo Y3 நான்கு நிறங்களில் வருகிறது
  • புதிய ஸ்டோரேஜ் வேரியண்டை Vivo-வின் சீன இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது
  • Vivo Y3-யின் 128GB ஸ்டோரேஜ் மே மாதம்அறிமுகப்படுத்தப்பட்டது
விளம்பரம்

Vivo Y3 சீனாவில் புதிய மாறுபாட்டைப் பெற்றுள்ளது. புதிய மாறுபாடு 4GB RAM + 64GB ஸ்டோரேஜுடன் வருகிறது. Vivo Y3-யின் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் விருப்பத்தை சீன நிறுவனம் முன்பே அறிமுகப்படுத்தியது. 


Vivo Y3-யின் விலை:

Vivo Y3-யின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை CNY 999 (சுமார் ரூ. 10,000) என Vivo-வின் சீன இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ போனின் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை CNY 1,498 (சுமார் ரூ. 15,000) என மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புது அறிமுகமான 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் Ink Blue மற்றும் Red-Black நிறங்களில் வருகிறது. அதே சமயம் Peacock Blue மற்றும் Peach Pink நிறங்களும் உள்ளன.

Vivo Y3 உலகளாவிய வெளியீடு குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


Vivo Y3-யின் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Vivo Y3, Funtouch OS 9 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 6.35-inch HD+ (720x1544 pixels) டிஸ்பிளேவுடன் 19.3:9 aspect ratio மற்றும் 89% screen-to-body ratio ஆகிய அம்சத்தைக் கொண்டுள்ளது. ஹூட்டின் படி, இந்த போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core MediaTek P35 SoC-யால் இயக்கப்படுகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Vivo Y3-யில் f/2.2 lens உடன் 13-megapixel முதன்மை கேமரா சென்சார், கூடவே ultra-wide lens உடன் 8-megapixel சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார்களுடன் triple rear கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், f/2.0 lens உடன் 16-megapixel செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

Vivo Y3 64GB மற்றும் 128GB ஆன்போர்ட் ஸ்டோரேஜ் விருப்பத்தைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் microSD card  வழியாக 256GB வரையிலான விரிவாக்கத்தை ஆதரிக்கின்றன. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Bluetooth, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்ட் சென்சாரில் accelerometer, digital compass, fingerprint சென்சார் மற்றும் proximity சென்சார் ஆகிய சென்சார்கள் அடங்கும். மேலும், இந்த போன் Dual Engine fast charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

  • KEY SPECS
  • NEWS
Display 6.35-inch
Processor MediaTek Helio P35 (MT6765)
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android Pie
Resolution 720x1544 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங் வெறியர்களே ரெடியா? S26 Ultra-வோட 360 டிகிரி லுக் வெளியாகிடுச்சு! அந்த கேமரா ஐலேண்ட் வேற லெவல்.. முழு விவரம் உள்ளே
  2. Pixel 9a விலையில 11,000 ரூபாய் அதிரடி குறைப்பு! கூகுள் கேமரா வேணுமா? அப்போ உடனே இதை பாருங்க
  3. வெயிட்டிங் லிஸ்ட் ஓபன்! Samsung Galaxy S26 சீரிஸ் இப்போவே ப்ரீ-ரிசர்வ் பண்ணலாம்! அமேசான், பிளிப்கார்ட்ல அதிரடி விற்பனை
  4. பட்ஜெட் பத்தி கவலையே இல்ல! Samsung Galaxy S24 Ultra விலையில ₹25,000 தள்ளுபடி! அமேசான்ல ஆஃபர் மழை.. சீக்கிரம் பாருங்க
  5. சார்ஜ் போட மறந்தாலும் கவலை இல்ல! Oppo K14x 5G-ல அசுரத்தனமான 6500mAh பேட்டரி! விலை என்ன தெரியுமா?
  6. ஒன்பிளஸ் வெறியர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 13 விலையில 12,000 ரூபாய் அதிரடி குறைப்பு! இந்த சான்ஸ விட்றாதீங்க மக்களே
  7. iPhone-க்கு டஃப் கொடுக்க Samsung S26 ரெடி! எப்போ லான்ச்? என்னென்ன ஸ்பெஷல்? முழு விவரம் உள்ளே
  8. OnePlus-ல இவ்வளவு கம்மி விலையா? Pad 3 முதல் Buds Pro 3 வரை வாரி வழங்கும் சலுகைகள்
  9. பட்ஜெட் விலையில ஒரு தரமான 5G போன்! Lava Bold N2 இந்தியாவிற்கு வராரு.. மத்த பிராண்ட்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க
  10. டேட் குறிச்சாச்சு! Samsung Galaxy S26 பிப்ரவரி 25-ல் லான்ச்.. சாம்சங் வலைதளத்திலேயே லீக் ஆன ரகசிய தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »