விவோ நிறுவனம் விவோ X50 மற்றும் X50 Pro என்ற இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.
முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான விவோ நிறுவனம், தற்போது இந்தியாவில் இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை, விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ ஆகும். இந்த இரண்டு மாடல்களும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவுடன் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 3டி சவுண்ட் டிராக்கிங், ஆடியோ ஜூம், சூப்பர் நைட் 3.0 உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
விவோ எக்ஸ் 50, விவோ எக்ஸ் 50 ப்ரோ இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்பிளே விரல் ரேகை சென்சார் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக விவோ எக்ஸ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிம்பல் கேமரா சிஸ்டம் உள்ளது. இதன் மூலம் போட்டோ, வீடியோக்களை எந்த அதிர்வு நடுக்கங்களும் இல்லாமல் துல்லியமாக படம் பிடிக்க முடியும்.
விவோ எக்ஸ் 50 சிறப்பம்சங்கள்:
நெட்வொர்க்: 4ஜி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.56 இன்ச் Full HD
திரை: அமோலேட் HDR 10+ சப்போர்ட், 90Hz ரெவ்ரஷ் ரேட்
ப்ராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 730 SoC
ரேம்: 8 ஜிபி
பேட்டரி: 4,200mAh
சார்ஜர்: 33W ஃபிளாஷ் சார்ஜர்
கேமரா:
சென்சார்: சோனி IMX598
பிரைமரி கேமரா: 48MP + 8MP + 5MP + 13MP
செல்ஃபி கேமரா: 32MP
விவோ எக்ஸ் 50 ப்ரோ சிறப்பம்சங்கள்:
நெட்வொர்க்: 5ஜி, 4ஜி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.56 இன்ச் Full HD
திரை: அமோலேட் HDR 10+ சப்போர்ட், 90Hz ரெவ்ரஷ் ரேட்
ப்ராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 765 SoC
ரேம்: 8 ஜிபி
பேட்டரி: 4,315mAh
சார்ஜர்: 33W ஃபிளாஷ் சார்ஜர்
கேமரா:
சென்சார்: சோனி IMX598
பிரைமரி கேமரா: 48MP + 8MP + 8MP + 13MP
செல்ஃபி கேமரா: 32MP
விவோ எக்ஸ் 50, விவோ எக்ஸ் 50 ப்ரோ விலை:
விவோ எக்ஸ் 50 ஸ்மார்ட்போனில் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.34,990 என்றும், 256ஜிபி வேரியண்ட் கொண்ட மாடலின் விலை ரூ.37,990 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல், விவோ எக்ஸ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜூலை 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன. ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மால், டாடா கிளிக் உள்ளிட்ட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொண்டு இந்த போன்களை வாங்கலாம். இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அறிமுக சலுகையாக, HDFC மற்றும் ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு 4,000 ரூபாய் வரையில் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது. மேலும், விவோ ரிவார்ட் மற்றும் அப்கிரேடு பயன்பாட்டின் கீழ், 65 சதவீதம் பைபேக் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்