இந்த இரண்டு தயாரிப்புகளும் வரும் மார்ச் 23 முதல் சீனாவில் விற்பனைக்கு வெளியாகின்றன
சீனாவில் விவோ X27 மற்றும் விவோ X27 ப்ரோ போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பாப்-அப் செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 9 பைய் மற்றும் ஃபன்டச் 9 மென்பொருள் போன்ற பல முக்கிய அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. விவோ நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்புகள் இம்மாதம் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
விவோ X27 மற்றும் விவோ X27 ப்ரோ போன்களின் விலை:
சீனாவில் 8ஜிபி ரேம்/ 128ஜிபி சேமிப்பு வசதிகொண்ட தயாரிப்பான விவோ X27 ஸ்மார்ட்போன் ரூ.32,900 மதிப்புக்கும், அதே போனின் 8ஜிபி ரேம்/ 256ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ரூ.37,000 மதிப்பைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில், விவோ X27 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம்/256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.41,000க்கு விற்பனை செய்யப்படுகறிது.
இந்த இரண்டு தயாரிப்புகளும் வரும் மார்ச் 23 முதல் சீனாவில் விற்பனைக்கு வெளியாகின்ற நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை மற்றும் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
விவோ X27 மற்றும் விவோ X27 ப்ரோ போன்களின் அமைப்புகள்:
விவோ X27 ஸ்மார்ட்போன் இரண்டு சிம் கார்டு ஸ்லாட்களை பெற்றுள்ளன. ஆண்ட்ராய்டு 9.0 பைய் மற்றும் ஃபன்டச் மென்பொருளை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.
6.39 இஞ்ச் ஹெச்டி திரை, ஹெக்சா கோர் குவால்ம் ஸ்னாப்டிராகன் 710 SoC மற்றும் 8ஜிபி ரேம் வசதிகள் இந்த போனில் இருக்கும். 128ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த ஸ்மார்ட்போன் வகைதில் ஸ்னாப்டிராகன் 675 SoC இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேமரா அமைப்புகளைப் பொறுத்தவரை விவோ X27, மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளன. 48 மெகா பிக்சல் சோனி IMX586 முதற்கட்ட சென்சார், 13 மெகா பிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட மூன்றாம் நிலை சென்சாரையும் இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு பெற்றுள்ளது.
முன் புறத்தில் 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா சென்சார் இருக்கின்ற நிலையில், செயற்கை நுண்ணறிவு கொண்ட அமைப்புகள் இந்த போனில் இடம் பெற்றுள்ளதால் சிறந்த புகைப்படங்களைப் பெற முடியும்.
128ஜிபி மற்றும் 256ஜிபி சேமிப்பு வசதி இந்த போனில் இடம் பெற்றுள்ள நிலையில், இந்த தயாரிப்பில் 4,000mAh பேட்டரி பவரை கொண்டுள்ளது. மேலும் 256ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடலில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி பொருத்தப்பட்டுள்ளது.
6.7 இஞ்ச் திரை கொண்ட விவோ X27 ப்ரோ ஸ்மார்ட்போன், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 SoC மற்றும் 8ஜிபி ரேம் வசதி இடம் பெற்றுள்ளது.
விவோ X27 மாடலைப் போல இந்த தயாரிப்பிலும் மூன்று பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்ற. 48 மெகா பிக்சல் சோனி IMX586 சென்சார் மற்றும் 32 மெகா பிக்சல் முன்புற கேமாரவும் இந்த போனில் இடம் பெற்றுள்ளன.
256ஜிபி சேமிப்பு வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பின்புற ஃபிங்கர் பிரின்ட் திரை மற்றும் 4,000mAh பேட்டரி வசதியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்