24.8 செல்பி கேமராவுடன் அறிமுகமாகிறது ’விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷன்’!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
24.8 செல்பி கேமராவுடன் அறிமுகமாகிறது ’விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷன்’!

விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷனின் சீன விலை CNY 2,798 (ரூ. 28,900).

ஹைலைட்ஸ்
 • விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • அப்கிரேடட் செல்ஃபி கேமிராவுடன் வருகிறது.
 • ஸ்நாப்டிராகன் 660 ப்ராசஸரில் இயங்குகிறது.

விவோ வி23 மற்றொரு வேரியண்ட்டை விவோ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மாதத்தில் விவோ எக்ஸ் 23 ஸ்டார் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது எக்ஸ் 23 சிம்போனி எடிஷன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. விவோ எக்ஸ்23 வேரியண்ட் செப்டம்பர் மாதம் வெளியானது. விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷன் புதிய கிரேடியண்ட் நிறத்தை கொண்டுள்ளது. மேலும், ரேம், ப்ராசஸர் மற்றும் கேமிராவில் சிறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷனின் விலை

விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷன் சீன விலை CNY 2,798 (ரூ. 28,900). இது முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எக்ஸ்23-ன் அறிமுக விலையை விட ரூ.8,000 குறைவு. இந்த ஸ்மார்ட்போன் தற்போது விவோவின் சீன இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.

விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷனின் முக்கிய அம்சங்கள்

விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷனில் ப்ராசஸர், ரேம் மற்றும் முன்பக்க கேமிராவில் விவோ புதிய மாறுதல்களை செய்துள்ளது. விவோ 23 சிம்போனி எடிஷன் டூயல் சிம் ஸ்மார்ட்போனாகும். இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாக கொண்ட funtouch OSயைக் கொண்டுள்ளது. மேலும் 6.41 இன்ச் ஹெச்.டி + சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேயை பெற்றுள்ளது.

விவோ சிம்போனி எடிஷனில் டூயல் கேமிரா உள்ளது. 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் உடன் f/1.8 aperture மற்றும் 13 மெகா பிக்சல் செகண்டரி சென்சார் f/2.4 apertue மற்றும் 125 டிகிரி சூப்பர் ஒயிட் ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது. விவோ எக்ஸ்23 சிம்போனி எடிஷன் 24.8 மெகா பிக்சல் முன்பக்க கேமிராவைக் பெற்றுள்ளது. 128ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 24.8-megapixel
Rear Camera 12-megapixel + 13-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3400mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. WhatsApp Update: இனி ஷேர் சாட் வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பார்க்கலாம்!
 2. Samsung Galaxy A51ஸ்மார்ட்போனின் விலை குறைப்பு! கேஷ்பேக் ஆஃபரும் அறிவிப்பு!!
 3. சாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம்! விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ!
 4. PUBG Update: பீட்டா வெர்ஷனில் Erangel 2.0 மேப் அறிமுகம்!
 5. Whatsapp Update: புதிதாக வரவுள்ள செர்ச் ஆப்ஷன், எக்ஸ்பைரி மெசேஜ் வசதிகள்!
 6. Xiaomi சுதந்திர நாள் சிறப்பு விற்பனை: ரெட்மி K20 Pro ஸ்மார்ட்போனுக்கு ரூ.4,000 தள்ளுபடி!
 7. Mi TV Stick அறிமுகம்..! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.!!
 8. வாட்ஸ்அப்பில் பிரவுசிங் அறிமுகம்! இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!
 9. Redmi 9 Prime அறிமுகம்! பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட்போன்!!
 10. நான்கு கேமராக்களுடன் Realme V5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com