Photo Credit: Vivo
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Vivo X200 செல்போன் சீரியஸ் பற்றி தான்.
Vivo X200 செல்போன் தொடர் சீனாவில் சமீபத்திய MediaTek Dimensity 9400 SoC உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய MediaTek சிப்செட்டின் முறையான அறிமுகத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. Dimensity 9400 ஆனது 3nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய சிப்களை விட 40 சதவீதம் அதிக ஆற்றல் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இது 3.62GHz வேகத்தில் இயங்கும் ஒரு ஆர்ம் கார்டெக்ஸ்-X925 கோர் அமைப்பை கொண்டுள்ளது. Vivo தவிர Oppo நிறுவனமும் இனி வரவிருக்கும் செல்போன்களில் Dimensity 9400 SoC சிப் பயன்படுத்தப்படும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அடிப்படை Vivo X200, Vivo X200 Pro மற்றும் Vivo X200 Pro Mini ஆகியவற்றை உள்ளடக்கிய செல்போன் சீரியஸ் அக்டோபர் 14 அன்று மாலை 7 மணிக்கு சீனாவில் வெளியிடப்பட உள்ளது. Vivo X200 மற்றும் Vivo X200 Pro ஆகியவை மிட்நைட் பிளாக், மூன்லைட் ஒயிட், சபையர் ப்ளூ மற்றும் டைட்டானியம் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. Vivo X200 Pro Mini கருப்பு, இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய வண்ண விருப்பங்களில் வரும். இருப்பினும் செல்போன் நிரங்களின் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
Vivo X200 செல்போன் சீரியஸ் Dimensity 9400 சிப்செட்டிலிருந்து சக்தியைப் பெறும் முதல் ஸ்மார்ட்போன்களின் தொகுப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. SoC ஆனது TSMC இன் 3nm செயல்முறையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வகை செல்போன்களில் AI அம்சங்கள் மற்றும் புதிய ISP மற்றும் NPU அம்சங்கள் இருக்கும். இது 3.63 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். கார்டெக்ஸ்-எக்ஸ்925 மற்றும் 3.3 ஜிகாஹெர்ட்ஸ் அதிகபட்ச அதிர்வெண் கொண்ட மூன்று கார்டெக்ஸ்-எக்ஸ்4 யூனிட்களை இந்த சிப் கொண்டுள்ளது. இது மேலும் நான்கு 2.4 GHz வேக திறன் கொண்ட கார்டெக்ஸ்-A720 யூனிட்களை உள்ளடக்கியது.
MediaTek இன் Dimensity 9300 உடன் ஒப்பிடும்போது புதிய சிப்செட் 35 சதவிகிதம் வேகமான செயல்திறனையும் 28 சதவிகிதம் வேகமான மல்டி-கோர் செயல்திறனையும் வழங்கும் என்று MediaTek கூறுகிறது.
Vivo X200 செல்போன் சீரியஸ் தாண்டி MediaTek சிப் Oppo Find X8 செல்போன் சீரியஸ் மற்றும் சீன OEM நிறுவனங்களின் பிற முதன்மை செல்போன்களில் இனி பயன்படுத்தப்படும். Vivo X200 செல்போன் 12GB ரேம் 256GB மெமரி மாடல் தோராயமாக ரூ. 48,000 என்கிற விலையில் சீனாவில் தொடங்கும் என கூறப்படுகிறது .
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்