விவோ நிறுவனத்தின் பிரீமியம் ஃபிளாக்ஷிப் மாடலான Vivo X200, அமேசான் தளத்தில் மிகப்பெரிய விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது
Photo Credit: Vivo
விவோ எக்ஸ்200 இப்போது அமேசானில் ரூ.69,000க்கு கீழ் கிடைக்கிறது.
நீங்க ஒரு போட்டோகிராபி லவ்வர் அப்படின்னா, கண்டிப்பா விவோவோட 'X' சீரிஸ் போன்கள் மேல உங்களுக்கு ஒரு தனி மரியாதை இருக்கும். ஏன்னா, அந்த அளவுக்கு Zeiss லென்ஸ் வச்சு கேமராவுல வித்தை காட்டிட்டு இருக்காங்க. இப்போ அந்த வரிசையில லேட்டஸ்டா வந்த Vivo X200 மொபைலுக்கு அமேசான்ல ஒரு அதிரடி ஆஃபர் வந்திருக்கு. இந்த போன் இந்தியாவுல லான்ச் ஆனப்போ இதோட விலை ₹74,999. ஆனா இப்போ எந்த ஒரு நிபந்தனையும் இல்லாம நேரடியா ₹6,000 குறைக்கப்பட்டு அமேசான்ல ₹68,999-க்கு லிஸ்ட் ஆகியிருக்கு. இதுமட்டும் இல்லாம, உங்ககிட்ட அமேசான் பே ICICI கிரெடிட் கார்டு இருந்தா, கூடுதலா ₹2,069 வரை தள்ளுபடி கிடைக்குது. இதனால இந்த போனை நீங்க சுமார் ₹66,930 விலையிலேயே வாங்கிடலாம்.
டிசைனை பொறுத்தவரை இது ஒரு 'காம்பாக்ட்' மற்றும் பிரீமியம் மொபைல். 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, அதுவும் 4,500 நிட்ஸ் பிரைட்னஸோட வர்றதால ஸ்க்ரீன் பாக்க செம பளிச்சுனு இருக்கும். இதுல இருக்குற MediaTek Dimensity 9400 சிப்செட், இப்போதைக்கு ஆண்ட்ராய்டு உலகத்துல இருக்குற டாப் பெர்பார்மர்ஸ்ல ஒன்னு. கேமிங் முதல் எடிட்டிங் வரை எல்லாமே அக்னிச்சிறகு வேகத்துல இருக்கும்.
மூணு 50MP கேமராக்கள் இதுல இருக்கு. 50MP மெயின் கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ (ஜூம் பண்றதுக்கு), அப்புறம் 50MP அல்ட்ராவைடு. குறிப்பா அந்த 100x ஹைப்பர் ஜூம் வசதி வேற லெவல்! நைட் மோட்ல கூட பகல் மாதிரி போட்டோ எடுக்குற அளவுக்கு Zeiss ஆப்டிக்ஸ் இதுல வேலை செய்யுது.
பேட்டரி விஷயத்துல விவோ இந்த தடவை மிரட்டியிருக்காங்க. 7.99mm ஸ்லிம் பாடிக்குள்ள 5,800mAh பேட்டரியை அடக்கியிருக்காங்க. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் இருக்கறதால அரை மணி நேரத்துல போன் ஃபுல்லா சார்ஜ் ஆகிடும். IP69 ரேட்டிங் இருக்கறதால தண்ணிக்குள்ள விழுந்தாலும் கவலைப்பட வேணாம்.
பழைய போனை மாத்தணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான சான்ஸ். ஏன்னா அமேசான்ல எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலமா ₹44,000 வரைக்கும் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஸ்டாக் முடியுறதுக்குள்ள செக் பண்ணி பாருங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Z Flip 8 to Reportedly Miss Out on Major Camera Upgrades; Specifications Leak
Apple's iOS 26.3 Beta 2 Update Hints at End-to-End Encryption Support for RCS Messaging: Report