Photo Credit: Twitter/ Ice Universe
இந்த புதிய விவோ ஃபோனுக்கு ‘தி வாட்டர் ட்ராப்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மெல்லிய டிஸ்ப்ளே உள்ள ஃபோன்களின் வகையில் மிக முன்னணி நிறுவனமான வீவோ தனது புதிய அறிமுகத்திற்காகத் தயாராகி வருகிறது எனத் தகவல் கசிந்துள்ளது. மேலும் இது போன்ற அட்டகாசமான வடிவமைப்பை பார்த்திருக்க முடியாது என அந்நிறுவன வட்டாரம் தகவல் அளித்துள்ளது.
சில புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு மீதமுள்ளதை நமது கற்பனைக்கே விட்டுச் சென்றுள்ளது வீவோ. மேலும் இந்த புதிய வீவோ ஃபோனுக்கு ‘தி வாட்டர் ட்ராப்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய மாடல் ஃபோனில் பட்டன் வசதிகள் ஏதுமில்லாததால் இது மிகவும் மெல்லிய ஸ்கீரினை மட்டுமே கொண்டுள்ளது. அதனால் கூட இந்த ஃபோனுக்கு வாட்டர் ட்ராப் என பெயர் இருக்கலாம் எனத் தெரிகிறது. வெளியாகியுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த புதிய ஸ்மார்ட் ஃபோன் மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது உறுதி.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்