விவோ வி9 18,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது, தற்போது அதில் 17,990 விற்பனைக்கு வருகிறது
விவோ வி9 யூத் மொபைலின் விலையை குறைத்துள்ளது விவோ நிறுவனம். ஏப்ரல் மாதம் வெளியான இந்த மொபைல் 18,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது. தற்போது அதில் 1000 ரூபாய் குறைந்து 17,990 விற்பனைக்கு வருகிறது. விலை குறைப்பு பற்றி முதலில் தகவல தந்தது மும்பையைச் சேர்ந்த மஹேஷ் டெலிகாம் நிறுவனம் தான். விவோ நிறுவனம் இது பற்றி தகவல் வெளியிடவில்லை. இந்த மொபைலை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனிலும் வாங்கலாம்.
ஆண்ட்ராய்டு 8.01 ஓரியோ இயங்கு தளத்தோடு, ஃபன் டச் 4.0 இயங்குதளம் இந்த ஸ்மார்ட்ஃபோனில் இருக்கிறது. 6.3 முழு ஹெச்.டி ஸ்கிரீனும் உள்ளது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 450 பிராசருடன், 4 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது வி9 யூத். டூயல் கேமராவும் உள்ளது. பிரைமரி கேமரா 16 எம்.பியும், செகண்டரி கேமரா 2 எம்.பியும் கொண்டது. முன் பக்கத்தில் 16 எம்.பி செல்ஃபி கேமரா, செயற்கை நுண் அறிவு தொழில் நுட்பத்துடன் வருகிறது. 3260 எம்.ஏ.ஹெச் பேட்டரியும் இதன் சிறப்பு.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
ACT Fibernet Launches Revamped Broadband Plans Starting at Rs. 499
Apple Announces App Store Awards 2025 Winners; Top Apps Include Tiimo, Cyberpunk 2077: Ultimate Edition, and More