Vivo V40, Vivo V40 Pro வரப்போகுது! இவ்வளோ அம்சங்கள் இருக்குதா?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 30 ஜூலை 2024 17:02 IST
ஹைலைட்ஸ்
  • Vivo V40 இரட்டை 50 மெகாபிக்சல் பின்புற கேமராக்களுடன் வருகிறது
  • Vivo V40 ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டைக் கொண்டுள
  • கைபேசி 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது

Vivo நிறுவனம் தனது புதிய Vivo V40 மற்றும் Vivo V40 Pro ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன்கள் வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Vivo V40 ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை Zeiss வசதியுடன் கூடிய கேமராக்களை பெற்று இருக்கும் என தெரிகிறது. 


6.78 அங்குல வளைந்த AMOLED டிஸ்பிளே இருக்கும்.120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 4,500 nits பிரகாசத்தை கொண்டிருக்கும். Adreno 720 GPU உடன் இணைக்கப்பட்ட Snapdragon 7 Gen 3 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதனால் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம். 12GB வரை LPDDR4X ரேம் மற்றும் 512GB வரை UFS 2.2 மெமரி வசதியுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான FuntouchOS 14 இதில் இருக்கிறது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியை கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. 


பேட்டரியை பொறுத்தவரையில் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். கேமராவை பொறுத்தவரையில் Zeiss கேமரா சென்சார் வசதியைக் கொண்டுள்ளது. அதன்படி 50எம்பி பிமைரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கிறது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி முன்புற கேமராவும் இதில் உள்ளது.


இரட்டை சிம், 5G, Wi-Fi 6, புளூடூத் 5.4, NFC, GPS மற்றும் USB Type-C இணைப்புகளை சப்போர்ட் செய்கிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68-மதிப்பிட்டை பெற்றுள்ளது. மொத்தமாக 190 கிராம் எடை கொண்டது. எளிதாக எடுத்துச்செல்ல முடியும். 50 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

 
KEY SPECS
Display 6.67-inch
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 14
Resolution 2400x1080 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo V40, VivoV40 Pro, Vivo
குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.
...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.