4,880mAh பவர் கொண்ட பேட்டரியுடனும், மொத்தமாக 190.5 கிராம் எடையுடனும் இந்த போன் விற்பனைக்கு வரும்
விவோ V1901 எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து தகவல் இல்லை.
விவோ நிறுவனம் சார்பில் அடுத்ததாக Vivo V1901 ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என்று தகவல் கசிந்துள்ளது. இந்த போனுக்கு TENAA சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்துதான் விவோ, அடுத்ததாக V1901 போனை களமிறக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. TENAA தளத்தில், V1901 போன் குறித்த சில முக்கிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கும். கிரேடியன்ட் டிசைன் இடம் பெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளது. 6.3 இன்ச் ஸ்க்ரீன், ஆக்டா-கோர் எஸ்.ஓ.சி பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 சேமிப்பு உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் அடங்கியிருக்கும்.
போனின் நிறங்களைப் பொறுத்தவரையில் கிரேடியன்ட் ப்ளூ மற்றும் கோல்டு வேரியன்டகிளில் வரலாம். ஆண்ட்ராய்டு பைய் மூலம் போன் இயங்கலாம்.
TENAA தளத்தில் இருக்கும் போனின் படங்களை ஆராய்ந்தால், வாட்டர்- ட்ராப் நாட்ச் வசதியும் சின்ன இயர்-பீஸும் இருப்பது தெரிகிறது. பின்புறம், பிங்கர் பிரின்ட் சென்சார் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
மேலும் 4 ஜிபி ரேம், ஆக்டா- கோர் ப்ராசஸரையும் V1901 பெற்றிருக்கும் எனப்படுகிறது. 64 மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகளை கொண்டு இந்த போன் வரும் என்றும், 256 ஜிபி வரை சேமிப்பு வசதியை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தெரிகிறது.
பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று கேமராக்கள் 13, 8 மற்றும் 2 மெகா பிக்சல் கேமராக்களை கொண்டிருக்கும் எனப்படுகிறது. முன்புறத்தில் 16 அல்லது 8 மெகா பிக்சல் கேமரா இருக்கலாம். 4,880mAh பவர் கொண்ட பேட்டரியுடனும், மொத்தமாக 190.5 கிராம் எடையுடனும் இந்த போன் விற்பனைக்கு வரும். விவோ V1901 எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து தகவல் இல்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces