விவோ வி19-ன் அறிமுகத்தை விவோ தாய்லாந்தும் கிண்டல் செய்கிறது, இருப்பினும் நாடு வித்தியாச பதிப்பைப் பெறுவதாகத் தெரிகிறது.
Vivo V19, Crystal White மற்றும் Arctic Blue கலர்களில் கிடைக்கும்
இந்தோனேசிய சந்தையில் விவோவின் புதிய ஸ்மார்ட்போனான விவோ வி19 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ வி 19 பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பு மற்றும் விவோ வி17-ஐப் போலவே செல்பி ஷூட்டருக்கான ஹோல்-பஞ்ச் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 675 SoC உடன் வருகிறது.
Vivo V19-ன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை IDR 4,299,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,100)-யாகவும் மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை IDR 4,999,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,700)-யாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் தற்போது இந்தோனேசியாவில் மார்ச் 25 ஆம் தேதி வரை, Shopee, Tokopedia-வில் முன்பதிவுகளுக்காக உள்ளது. மேலும், நிறுவனத்தின் ட்வீட் படி, ஆஃப்லைன் கடைகளிலும் உள்ளது.
டூயல்-சிம் (நானோ) விவோ வி19, Funtouch OS 10 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. போனில் 6.44 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. Vivo வி19 ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 SoC, அட்ரினோ 612 ஜி.பீ.யூ மற்றும் 8 ஜிபி ரேம் உடன் வருகிறது. போனில் கிடைக்கும் ஒரே ரேம் வேரியண்ட் இதுதான்.
விவோ வி19, பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், f/1.8 aperture உடன் முதன்மை 48 மெகாபிக்சல் AI சென்சார் உள்ளது. f/2.2 aperture உடன் 8 மெகாபிக்சல் சூப்பர் வைட்-ஆங்கிள் சென்சார், f/2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் இறுதியாக f/2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் சூப்பர் மேக்ரோ சென்சார் உள்ளது. முன்பக்கத்தில், f/2.45 ஷூட்டருடன் 32 மெகாபிக்சல் சென்சாரைப் பெறுவீர்கள்.
விவோ வி19 இரண்டு ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது - 128 ஜிபி மற்றும் 256 ஜிபி - இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கம் செய்யலாம். இணைப்பிற்காக, இரட்டை பேண்ட் Wi-Fi, GPS, Bluetooth v5.0, a 3.5mm headphone jack மற்றும் சார்ஜ் செய்வதற்கான USB Type-C port ஆகியவற்றிற்கான ஆதரவைப் பெறுவீர்கள். இதில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சாரும் உள்ளது.
விவோ வி19, 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது, இது 18W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த போன் 159.01 × 74.17 × 8.54 மிமீ அளவு மற்றும் 176 கிராம் எடை கொண்டது. விவோ வி19-ல் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light சென்சார், proximity சென்சார், e-compass மற்றும் gyroscope ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features