கசிந்துள்ள தகவல்கள்படி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூபாய் 33,000-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது.
உலகத்தின் முதல் 32 மெகா பிக்சல் பாப் ஆப் செல்ஃபி கேமரா, வி15 ப்ரோவில் இருக்கலாம் எனத் தகவல்!
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அதில் முன்னணியில் இருக்க விவோ நிறுவனம், தனது விவோ வி15 ப்ரோ தயாரிப்பை இன்று இந்தியாவில் அறிமுகபடுத்த உள்ளது. விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் வெளியான பாப் ஆப் செல்ஃபி கேமராவை போல் விவோ வி15 ஸ்மார்ட்போனிலும் வெளியாகும் என தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. மேலும் போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்களை அதன் டிசைன் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.
இன்று மதியம் சரியாக 12 மணிக்கு, டெல்லியில் நடக்கும் ஒரு விழாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம், யூ-டியுப் தளத்தில் லைவ் செய்யப்படுகிறது.
தற்போது கசிந்துள்ள தகவல்கள்படி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூபாய் 33,000-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது.
48 மெகா பிக்சல் சென்சார், 32 மெகா பிக்சல் பாப் ஆப் செல்ஃபி கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற முக்கிய அப்டேட்ஸ்களுடன் இந்த விவோ வி15 ப்ரோ வெளியாகவுள்ளது.
மேலும் ஏற்கெனவே கசிந்துள்ள தகவல்கள்படி, 6.39 இஞ்ச் முழு ஹெச்டி திரை, சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 Soc மற்றும் 6ஜிபி ரேம்/ 128 சேமிப்பு வசதி என பிரமிக்கவைக்கும் அம்சங்களுடன் இந்த போன் வெளியாகலாம் என எதிர்பார்கப்படுகிறது.
இத்தனை வசதிகளுடன் வெளியாகும் இந்த விவோ வி 15 ப்ரோ ஆர்டிஃபீஷியல் இன்டலிஜன்ஸை அதிகமாக பயன்படுத்தி செயல்படும் எனக் கூறப்படுகிறது.
விலையைப் பொறுத்தவரை இன்று வெளியாகும் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூபாய் 33,000-க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Truecaller Voicemail Feature Launched for Android Users in India With Transcription in 12 Regional Languages