அசத்தல் வசதிகளுடன் 'விவோ வி15' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

ரூ.23,990 விற்பனை செய்யப்பட உள்ள விவோ வி15 ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன.

அசத்தல் வசதிகளுடன் 'விவோ வி15' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

அறிமுக சலுகையாக விவோ வி15 போன்களை வாங்குபவர்களுக்கு வாங்கிய பிறகு ஸ்க்ரீன் ஏதாவது பாதிப்படைந்தால் ஒரு முறை முழுமையாக மாற்றி கொடுக்கப்படும்

ஹைலைட்ஸ்
  • இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் 6.53இஞ்ச் ஹெச்டி திரையை கொண்டுள்ளது.
  • ஃப்ரோசன் பிளாக், கிளாமர் ரெட் மற்றும் ராயல் புளூ நிறங்களில் வெளியாகுகிறுத
  • வரும் மார்ச் 25ஆம் தேதி முன்பதிவு தொடங்குகிறது.
விளம்பரம்

இந்திய சந்தையில் பல முக்கிய நிறுவனங்கள் தங்களது போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது விவோ சார்பில், விவோ வி15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு சந்தைகளில் வெளியான இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் பல மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 

விவோ வி15 விலை மற்றும் அறிமுக ஆஃபர்கள்:

இந்தியாவில் ரூ.23,990க்கு இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த தயாரிப்பு ஃப்ரோசன் பிளாக், கிளாமர் ரெட் மற்றும் ராயல் புளூ ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளன. இந்தியாவில் வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் விவோ வி15 ஸ்மார்ட்போன் மட்டுமே 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதியைப் பெற்றுள்ளது.

இப்படி பல முன்னணி வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் முன்பதிவுக்கு வரவுள்ளதாகவும் ஏப்ரல் 1 முதல் விற்பனை துவங்கப்படும் எனவும் விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-விற்பனை தளம், அமேசான், ஃபிளிப்கார்ட், பேடிஎம், டாடா CLiQ மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனையாகும்.

அறிமுக சலுகையாக விவோ வி15 போன்களை வாங்குபவர்களுக்கு வாங்கிய பிறகு ஸ்க்ரீன் ஏதாவது பாதிப்படைந்தால் ஒரு முறை முழுமையாக மாற்றி கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி 15 மாதத்திற்குக் கூடுதல் கட்டணமில்லா தவணைத் திட்ட வசதி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், 10,000 ரூபாய் மதிப்பிலான ஜியோ ஆஃபர்கள் மற்றும் பல வங்கிகளின் ஆஃபர்கள் இந்த போனுடன் வழங்கப்பட உள்ளன.
 

vivo v15 back gadgets 360 Vivo V15

 

விவோ வி15 அமைப்புகள்:

டூயல் நேனோ சிம் மற்றும் 6.53 முழு ஹெச்டி திரை கொண்டுள்ள இந்த விவோ வி15 ஸ்மார்ட்போன், கோர்னிங் கோரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 ஃபன்டச் ஓஎஸ்-ஐ பெற்றுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியா டெக் ஹூலியோ பி70 SoC மற்றும் 6ஜிபி ரேம் வசதிகள் இருக்கின்றன. பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 12/8/5 மெகா பிக்சல் சென்சார்களை கொண்டுள்ளது. முன் புறத்தில் செல்ஃபிகளுக்காக 32 மெகா பிக்சல் பாப்-ஆப் கேமரா சென்சாரையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை பின்புறத்தில் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. இதுமட்டுமின்றி விவோ வி15 ஸ்மார்ட்போன் 4,000mAh பேட்டரி வசதியையும் பெற்றுள்ளது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Attractive design
  • Long battery life
  • Good selfie camera
  • Bad
  • Micro-USB port
  • No Widevine L1 DRM for HD video streaming
  • No 4K video recording or stabilisation
  • Sub-par low-light photography
Display 6.53-inch
Processor MediaTek Helio P70
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. Samsung ரசிகர்களே, ஜாக்கிரதை! 6 வருஷத்துக்கு அப்புறம் வயர்லெஸ் சார்ஜிங் ஸ்பீட் மாறுது
  2. Star Wars ஃபேன்ஸ்-க்கு Oppo-வோட சர்ப்ரைஸ்! Reno 14F Limited Edition பத்தி தெரிஞ்சுக்கோங்க
  3. உங்க Oppo OnePlus போன்ல Android 16 அப்டேட் வந்துருச்சா? AI Features & புது டிசைன் மிரட்டல்
  4. பட்ஜெட்-ல Nothing டிசைன்! Phone 3a Lite லான்ச்! Glyph Light-உடன் மிரட்டலான அம்சங்கள்
  5. உங்க Pixel போன் இன்னும் ஸ்மார்ட் ஆகிடுச்சு! Messages-ல போட்டோவை Remix பண்ணலாமா? மிஸ் பண்ணாதீங்க
  6. Samsung Galaxy போன்ல புது Spyware தாக்குதல்! WhatsApp மூலமா வந்த ஆபத்து நீங்க செக் பண்ணீங்களா?
  7. Vivo-ன் அடுத்த பவர்ஃபுல் மாடல்! 7000mAh பேட்டரி 1.5K AMOLED Display! விலை என்ன தெரியுமா?
  8. Apple மாதிரி Action Key-ஆ? Lava Agni 4-ன் மிரட்டல் லீக்ஸ்! ₹30,000-க்கு கம்மி விலையில் இந்தியன் கிங்
  9. Airtel-ல ரீசார்ஜ் விலை ஏறுது! வெறும் வாய்ஸ் மட்டும் வேணுமா? இனி எவ்வளவு செலவாகும்னு தெரிஞ்சுக்கோங்க!
  10. Samsung Galaxy S26, S26+ : Raised Camera Island உடன் வடிவமைப்பு மாற்றம் லீக்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »