Vivo U10 சீனாவில் Vivo U3x-ஆக அறிமுகம்! விவரங்கள் உள்ளே!

Vivo U10 சீனாவில் Vivo U3x-ஆக அறிமுகம்! விவரங்கள் உள்ளே!

Vivo U3x மூன்று வண்ணங்கள் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்டுடன் வருகிறது

ஹைலைட்ஸ்
  • octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால் Vivo U3x இயக்கப்படுகிறது
  • 13-megapixel (f/2.2) முதன்மை கேமராவை கொண்டுள்ளது
  • முன்பக்கத்தில் f/1.8 lens உடன் 8-megapixel selfie camera உள்ளது
விளம்பரம்

Vivo அண்மையில் Vivo U10-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் யு-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் இதற்கிடையில், சீனாவில் Vivo U3x என்ற புதிய தொலைபேசியின் வருகையை நிறுவனம் கிண்டல் செய்து வந்தது. Vivo U3x இப்போது Vivo's home market-க்கு அதிகாரப்பூர்வமாகச் சென்றுள்ளது. மேலும், இது Vivo U10-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பு, அதே போன்ற வடிவமைப்பு மற்றும் internal hardware தோன்றுகிறது. 

Vivo U3x-ன் விலை

Vivo U3x 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜுக்கு CNY  799 (தோராயமாக ரூ .8,000)-யாகவும், 3 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் CNY 899 (சுமார் ரூ .9,000)-யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. Vivo U3x-ன் மிக உயர்ந்த 4 ஜிபி + 64 ஜிபி பதிப்பு சீனாவில் CNY 999 (தோராயமாக ரூ .10,000)-யாக இருக்கிறது. இந்த தொலைபேசி இப்போது சீனாவில் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும், Deep Lake Blue, Red Tea Red மற்றும் Midnight Black வண்ணங்களில் வருகிறது. முதல் இரண்டு gradient finish உடன் வெளிவருகின்றன. முதலில் வாங்குபவர்களுக்கு CNY 159 (சுமார் ரூ. 1,600) மதிப்புள்ள பாகங்கள் இலவசமாக வழங்குவது போன்ற பல சலுகைகளை Vivo அறிவித்துள்ளது. தற்போது வரை, Vivo சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் Vivo U3x விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.

Vivo U3x விவரக்குறிப்புகள்

இரட்டை சிம் (நானோ) Vivo U3x, Android 9-ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 9.1-ஐ இயங்குகிறது. 6.35-inch HD+ (1544×720 pixels) display-வைக் கொண்டுள்ளது. Vivo U10-ஐப் போலவே, octa-core Qualcomm Snapdragon 665 SoC-யால்  Vivo U3x இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Vivo U3x-ல் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 13-megapixel (f/2.2) primary camera, 8-megapixel (f/2.2) wide-angle snapper மற்றும் 2-megapixel (f/2.4) depth sensor ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் f/1.8 lens உடன் 8-megapixel selfie camera உள்ளது.

18W Dual Engine fast charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் Vivo U3x பொருத்தப்பட்டுள்ளது. மேலும் Bluetooth earphones மற்றும் fitness bands போன்ற சாதங்களை ரிவர்ஸ் சார்ஜிங் செய்யவும் ஆதரிக்கிறது. இருப்பினும், ரிவர்ஸ் சார்ஜிங்கிற்குத் தேவையான OTG கேபிள் தனித்தனியாக வாங்க வேண்டும். Vivo தொலைபேசியில் சேமிப்பு microSD card (up to 256GB) வரை விரிவாக்கக்கூடியது. பின்புறமாக rear-mounted fingerprint sensor மற்றும் face unlock அம்சத்துடன் வருகிறது Vivo U3x.

தொலைபேசியில் இண 4G LTE, Wi-Fi, Bluetooth 5,0 மற்றும் 3.5mm headphone jack, while onboard sensors உடன் accelerometer, ambient light, fingerprint reader, magnetometer மற்றும் proximity sensor ஆகியவை அடங்கும். Vivo U3x, 59.43x76.77x8.92mm மற்றும் 190.5 grams கொண்டதாகும்.

  • KEY SPECS
  • NEWS
Display 6.35-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1544 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo U3x, Vivo U3x Specifications
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »