Vivo U3, Spar Blue, Agate Black மற்றும் Onion Blue ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது.
Vivo U3 இப்போது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ e-shop வழியாக சீனாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக உள்ளது
Vivo U-சீரிஸில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை (Vivo U3) அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய Vivo, triple rear கேமராக்கள் மற்றும் gradient வடிவமைப்புடன் வழங்குகிறது. மென்பொருளைப் பொருத்தவரை, விளையாட்டுக்காக Game Space launcher, தொலைபேசியின் செயல்திறனை அதிகரிப்பதற்காக Multi-Turbo மற்றும் Jovi AI assistant போன்ற தனியுரிம அம்சங்களை வழங்குகிறது.
Vivo U3-யின் விலை
மேலே குறிப்பிட்டுள்ளபடி, Vivo U3 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இப்போது நாட்டின் அதிகாரப்பூர்வ Vivo e-shop-ல் இருந்து முன்கூட்டியே ஆர்டர்களுக்கு தயாராக உள்ளது. தொலைபேசியின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை CNY 999 (சுமார் ரூ .10,000)-யாகவும், higher-end 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை CNY 1,199 (தோராயமாக ரூ .12,000)-யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. Vivo U3, Spar Blue, Agate Black மற்றும் Onion Blue ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது. ஆனால் சீனாவுக்கு வெளியே உள்ள சந்தைகளில் கிடைப்பது குறித்து எந்த அறிவுப்பும் இல்லை.
Vivo U3-யின் விவரக்குறிப்புகள்:
டூயல்-சிம் (நானோ) Vivo U3, FunTouch OS 9 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 6.53-inch Full-HD+ (1080 x 2340 pixels) டிஸ்பிளேவுடன் 19.5:9 aspect ratio, pixel density of 394ppi மற்றும் 90.3 percent screen-to-body ratio ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. 6GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் வரை இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 675 processor-ஆல் இயக்கப்படுகிறது. இந்த face unlock-ஐ ஆதரிக்கிறது. ஆனால், நவீன USB Type-C port-க்கு பதிலாக charging மற்றும் file transfer-க்கு Micro-USB port அம்சத்தைக் கொண்டுள்ளது
போனின் triple rear கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், f/1.78 aperture உடன் 16-megapixel முதன்மை கேமரா, f/2.2 aperture உடன் 8-megapixel wide-angle snapper மற்றும் 2-megapixel depth சென்சார் அகியவை இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.0 aperture உடன் 16-megapixel கேமரா, செல்ஃபி மற்றும் வீடியோ கேமராவுக்கு waterdrop-style notch உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த போன் 18W Dual Engine Flash charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது. அங்கிகாரத்திற்காக rear-mounted fingerprint சென்சாரைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find X9 Ultra, Vivo X300 Ultra Leak: Tipster Shares Details of Anticipated 200-Megapixel Cameras