Vivo T4 Ultra, ஜூன் மாசம் ஆரம்பத்துலயே இந்தியால லான்ச் ஆகும்னு எதிர்பார்க்கப்படுது
Photo Credit: Vivo
விவோ நிறுவனத்தின் T தொடரில் அடுத்த ஸ்மார்ட்போனான T4 அல்ட்ராவின் அறிமுகத்தை அறிவிக்கத் தொடங்கியுள்ளது
ஸ்மார்ட்போன் உலகத்துல கேமராவுக்குன்னு தனி மார்க்கெட் இருக்குதுங்க. இந்த கேமரா போன் ரசிகர்களுக்காகவே Vivo ஒரு சூப்பர் நியூஸை கொண்டு வந்திருக்கு! போன வருஷம் வந்த T3 Ultra-க்கு அடுத்ததா, Vivo T4 Ultra-வை நம்ம இந்தியால கூடிய சீக்கிரம் லான்ச் பண்ண போறதா டீஸ் பண்ணியிருக்காங்க. அதுவும் என்னென்ன அம்சங்களோடன்னு தெரிஞ்சா நீங்களே அசந்து போவீங்க!கண்ணுக்கே தெரியாத தூரத்தையும் பக்கத்துல காட்டும் 100x ஜூம்! இந்த Vivo T4 Ultra-வோட பக்கா ஹைலைட்டே அதோட கேமரா தாங்க! பெரிய ஜூம் லென்ஸ் (periscope telephoto camera) இருக்குனு உறுதிப்படுத்தியிருக்காங்க. அதுமட்டுமில்லாம, 100x ஜூம் வரைக்கும் இருக்குமாம்! அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா? ரொம்ப தூரத்துல இருக்கிற ஒரு பொருளை கூட பக்கத்துல கொண்டு வந்து ஜூம் பண்ணி பார்க்க முடியும். மலை மேல இருக்கிற ஒரு கோயில் கோபுரத்தோட உச்சில இருக்கிற சிற்பத்தை கூட ஜூம் பண்ணி தெளிவா படம் எடுக்கலாம்னு வெச்சுக்கோங்க. நிஜமாவே இது ஒரு பெரிய அட்வான்ஸ்டு டெக்னாலஜிதான்.
போட்டோ எடுக்கும்போது வெளிச்சம் பத்தலையா? கவலையே பட வேண்டாம்! இந்த போன்ல ரிங் LED ஃபிளாஷ் இருக்குனு டீஸர்ல காட்டியிருக்காங்க. மூணு கேமரா இருக்கும்னு சொல்லப்படுது. இது நிச்சயமா நம்ம கேமரா பிரியர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டம்தான்!
எப்போ வரும்? எங்க வாங்கலாம்? இந்த Vivo T4 Ultra, ஜூன் மாசம் ஆரம்பத்துலயே இந்தியால லான்ச் ஆகும்னு எதிர்பார்க்கப்படுது. Flipkart, vivo-வோட ஆன்லைன் ஸ்டோர், அப்புறம் நம்ம ஊர்ல இருக்கிற மொபைல் கடைகள்னு எல்லா இடத்துலயும் இந்த போனை வாங்கலாம்.
மொத்தத்துல, Vivo T4 Ultra கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு ஒரு சரியான சாய்ஸா இருக்கும். அதிரடி ஜூம், நல்ல பெர்ஃபார்மன்ஸ், வேகமான சார்ஜிங்னு எல்லாமே இருக்கு. புது போன் வாங்கணும்னு யோசிக்கிறவங்க, இந்த Vivo T4 Ultra-வை கண்டிப்பா வெயிட் பண்ணி பார்க்கலாம்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்