விவோவின் சமீபத்திய ஸ்மார்ட்போனான விவோ எஸ் 6 சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 5ஜி ஆதரவு போனாகும். இந்த போனில், வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளே உள்ளது. மேலும், ஒரு பெரிய 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.
சீனாவில் Vivo S6-ன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,698 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.28,700) ஆகும். போனின் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,998 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.31,900) ஆகும். இந்த போன் ஏப்ரல் 3 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். விவோ எஸ் 6 ஸ்வான் லேக், டானூப் மற்றும் ஜாஸ் பிளாக் ஆப்ஷன்களில் வெளியிடப்படும்.
விவோ எஸ் 6 டூயல்-சிம் (நானோ) ஸ்டாட்டைக் கொண்டுள்ளது. இந்த போன், ஃபன் டச் ஓஎஸ் 10 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குகிறது. இது 6.44-இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன், 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டு, 2.26GHz எக்ஸினோஸ் 980 ஆக்டா கோர் பிராசசரால் இயக்கப்படுகிறது. 256 ஜிபி வரை இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
போனின் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். போனின் கேமரா அம்சங்களில் 4K video shooting, night scene, portrait, panorama, dynamic photo, AR cute shoot, short video, professional mode, slow motion மற்றும் time-lapse photography ஆகியவை அடங்கும். போனின் முன்புறத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ஒரு பெரிய 4,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. மற்ற போன்களில் உள்ளது போன்ற அதே இணைப்பு விருப்பங்கள் உள்ளன. டிஸ்பிளேவுக்கு அடியில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளது. இந்த போனில் வெப்பத்தை 10 சதவீதம் வரை குறைக்க கூல் டர்போ உள்ளது. இந்த போன் 161.16x74.66x8.68 மிமீ அளவு மற்றும் 181 கிராம் எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்