Vivo S5, diamond-shaped rear கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது
Vivo S5 விரைவில் சீனாவில் அறிமுகமாகவுள்ளது
Vivo S5 போனின் அறிமுகத்தை Vivo கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த டீஸர் போனின் பெயரையும் அதன் உடனடி வருகையையும் உறுதிப்படுத்துகிறது. இந்த போன் மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo S தொடரின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தொலைபேசிகள் Vivo S1 மற்றும் Vivo S1 Pro ஆகும். Vivo S1 உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இது சீனா வேரியண்டில் காணப்படும் pop-up செல்பி கேமராவுக்கு பதிலாக, waterdrop-style notch உடன் வந்தது.
Vivo S5 பற்றிய பதிவுகளை நிறுவனம் வெய்போவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. Vivo ஒரு வீடியோ மூலம் Vivo S5 வருகையை கிண்டல் செய்துள்ளது. இது வரவிருக்கும் Vivo 'S' தொடர் தொலைபேசியின் பெயரை உறுதிப்படுத்துகிறது. மேலும், தொலைபேசி ஒரு நல்ல அழகியலைக் கொண்டிருக்கும் என்பதை வலியுறுத்துகிறது. தொலைபேசியின் வெளியீட்டு தேதியும் தெரியவில்லை. ஆனால், இப்போது டீஸர்கள் வரத் தொடங்கியுள்ளதால், அது வெகு தொலைவில் இல்லை என்று தெரிகிறது.
Vivo S5 சீனப் பாடகர் காய் ஜுகுன் (Cai Xukun) மூலம் ஒரு ஊடக நேர்காணலில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. தொலைபேசியை அவர் கையில் வைத்திருப்பதால் தொலைபேசியின் பின்புறத்தைக் காணலாம். மேலும், இது diamond-shaped rear கேமரா தொகுதியைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கேமரா தொகுதியில் laser autofocus sensor மற்றும் LED flash ஆகியவை triple rear கேமரா அமைப்போடு அடங்கும். ஒப்பிடுகையில், Vivo S1 மற்றும் Vivo S1 Pro தொலைபேசிகள் பின்புற கேமரா அமைப்புகளை செங்குத்தாக சீரமைக்கின்றன. Vivo S1 மற்றும் Vivo S1 Pro-வைப் போலவே, Vivo S5-ல் gradient back panel finish காணப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket