வைர வடிவ பின்புற கேமரா அமைப்பைக் கொண்ட Vivo S5 சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய விவோ தொலைபேசியும் punch-hole டிஸ்ப்ளே டிசைனுடன் வருகிறது. கூடுதலாக, விவோ ஸ்மார்ட்போனில் கேமிங் செயல்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட அதன் சொந்தமாக உருவாக்கப்பட்ட Multi-Turbo தொழில்நுட்பத்தை வழங்குகிறது.
Vivo S5-ன் விலை:
Vivo S5-ன் 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு CNY 2,698 (சுமார் ரூ. 27,700)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 256 ஜிபி சேமிப்பு விருப்பம் CNY 2,998 (தோராயமாக ரூ. 30,700)-யாக விலையிடப்படுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Icelandic Blue, Phantom Blue, மற்றும் Star Black ஆகிய மூன்று வெவ்வேறு வண்ண விருப்பங்களில் வருகிறது. இது நவம்பர் 22 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். இருப்பினும், இந்தியாவில் அதன் கிடைக்கும் தன்மை மற்றும் விலை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Vivo S5-ன் சிறப்பம்சங்கள்:
டூயல்-சிம் (நானோ) Vivo S5, Funtouch OS 9.2 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 20:9 aspect ratio மற்றும் 1200 nits brightness உடன் 6.44-inch full-HD+ (1080x2400) Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், 8GB RAM உடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 712 SoC-யைக் கொண்டுள்ளது.
Vivo S5, diamond-shaped கேமரா அமைப்பு நான்கு தனித்துவமான சென்சார்களைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் f/1.79 lens உடன் 48-megapixel முதன்மை சென்சார் மற்றும் 120-degree of field of view (FoV)-க்கான ultra-wide-angle f/2.2 lens உடன் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், தொலைபேசியில் f/2.4 macro lens உடன் 2-megapixel சென்சார் மற்றும் f/2.48 lens உடன் 5-megapixel depth சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் f/2.45 lens உடன் 32-megapixel சென்சாரை விவோ வழங்குகிறது.
Vivo S5, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு விருப்பங்களுடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity sensor ஆகியவை அடங்கும்.
S5-ல் 4,100mAh பேட்டரியை Vivo வழங்கியுள்ளது. இது 22.5W Flash Charge வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. தவிர, இந்த போன் 157.90x73.92x8.64mm அளவிட்டையும், 188 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்