நவம்பர் 14-ல் அறிமுகமாகும் Vivo S5!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 2 நவம்பர் 2019 09:28 IST
ஹைலைட்ஸ்
  • Vivo S5 நிறுவனத்தின் S-சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும்
  • தொலைபேசியின் சர்வதேச வெளியீட்டைப் பற்றி எந்த தகவலும் இல்லை
  • Vivo S5 இடைப்பட்ட தொலைபேசியாக இருக்கலாம்

Vivo S5 வெளியீட்டு டீஸர்கள் தொலைபேசியைப் பற்றி கொஞ்சம் வெளிப்படுத்தியுள்ளன

Vivo S5 நவம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று, நிறுவனம் இன்று டீஸரில் அறிவித்தது. ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் எஸ்-சீரிஸின் ஒரு பகுதியாக இருக்கும். தற்போது Vivo S1 மற்றும் Vivo S1 Pro போன்ற தொலைபேசிகளை உள்ளடக்கியது. இந்தியாவில் கிடைக்கும் Vivo S1-ன் பதிப்பு நிறுவனத்தின் வீட்டுச் சந்தையில் சில்லறை விற்பனை செய்வதிலிருந்து வேறுபட்டது என்பது சுவாரஸ்யமானது. Vivo S5 பற்றி இப்போது அதிகம் தெரியவில்லை. இருப்பினும், Vivo S-சீரிஸ் தூதர் கெய் ஜுகுன் (Cai Xukun) இடம்பெற்ற வீடியோ கடந்த வாரம் கசிந்தது. இது, தொலைபேசியில் வைர வடிவ கேமரா (diamond-shaped camera) தொகுதி இருப்பதை குறிக்கிறது.

Vivo S5 வெளியீட்டு நாள்:

இன்று வெய்போவில் வெளியிடப்பட்ட வெளியீட்டு தேதி டீஸர், தொலைபேசியைப் பற்றிய எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. மேலும் நிறுவனம் வெளியிட்டுள்ள மற்ற டீஸர்களிலும் இதுதான். தொலைபேசி மற்ற Vivo S-சீரிஸ் தொலைபேசிகளைப் போலவே இடைப்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும்.

விவோ நவம்பர் 14 ஆம் தேதி சீனாவில் S5-ஐ வெளியிடும் என்றாலும், இந்த நேரத்தில் தொலைபேசியின் சர்வதேச அறிமுகத்தைப் பற்றி எந்த தகவலும் இல்லை. 

நினைவுகூற, Vivo S1-ன் ஆரம்ப விலை ரூ. 16,990 ஆகும். இது மூன்று ஸ்டோர்ரெஜ் வேரியண்டில் விற்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் 6.38-inch full-HD+ (1080x2340 pixels) Super AMOLED டிஸ்பிளே, MediaTek Helio P65 SoC மற்றும் 18W fast சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரி ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த போன் 4GB of RAM, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜ், triple rear cameras மற்றும் 32-megapixel selfie shooter. Vivo S1, Android 9.0 அடிப்படையிலான FunTouch OS 9.0-ல் இயங்குகிறது.

விவோவின் எதிர்கால டீஸர்கள் Vivo S5-ன் விவரக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo S5, Vivo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Sony LYT-901 வந்துருச்சு! 200 மெகாபிக்ஸல்... இனி போட்டோஸ் வேற லெவல்
  2. OnePlus-ன் Performance King! Ace 6T லான்ச் தேதி கன்ஃபார்ம்! 8000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளேன்னு செம பவர்
  3. 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே! Realme P4x வருது டிசம்பர் 4-ஆம் தேதி! காத்திருங்கள்
  4. WhatsApp-ல் உங்களுக்குப் பிடிச்ச AI Bot-க்கு டாட்டா! Meta AI மட்டும்தான் இனி உள்ளே வர முடியும்
  5. Xiaomi 17 Ultra டெலிஃபோட்டோ லென்ஸ் மட்டும் 200MP! DSLR-ஐ ஓரங்கட்டப் போற Xiaomi-யின் அடுத்த பிளான்
  6. POCO C85 5G: Dimensity 6100+, ஃப்ரண்ட் டிசைன் லீக் - இந்தியா வருகை உறுதி!
  7. சார்ஜ் பத்தி கவலையே வேணாம்! OnePlus Ace 6 Turbo-வில் 9,000mAh பேட்டரி! Snapdragon 8s Gen 4 பவர் வேற!
  8. Nord 4 யூசர்ஸ் கொண்டாடுங்க! OxygenOS 16 அப்டேட் வழியா AI மோட், புது Widget-கள், செம கஸ்டமைசேஷன் ஆப்ஷன்ஸ் கிடைச்சுருக்கு
  9. Google Circle to Search-ல இப்படி ஒரு பவர் கிடைச்சுருக்கு! AI மோட் மூலமா இனி நீங்க கேட்குற எல்லா கேள்விக்கும் டக்குனு பதில்!
  10. வருத்தம் தரும் செய்தி! நம்ம டெய்லி Chat-க்கு ஹெல்ப் பண்ண Microsoft Copilot AI, வாட்ஸ்அப்-ல இருந்து விலகுறாங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.