இந்தியாவில் விவோ எஸ் 1 விலை ரூ.17,990-யில் இருந்து ரூ.16,990-யாக குறைக்கப்பட்டுள்ளது.
விவோ எஸ் 1 இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் மூன்று வெவ்வேறு வேரியண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது
இந்தியாவில் விவோ எஸ் 1-ன் விலை குறைந்துள்ளது. இந்த போனின் விலையில் ரூ.1000 குறைக்க விவோ பிராண்ட் முடிவு செய்துள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இப்போது இந்த விவோ ஸ்மார்ட்போனை ரூ.16,990-க்கு வாங்க முடியும். இந்த போன் கடந்த ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Vivo S1-ன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.17,990-யில் இருந்து ரூ.16,990-யாக குறைக்கப்பட்டுள்ளது. போனின் ரூ.1,000 விலைக் குறைப்பு விவோ இந்தியா இ-ஸ்டோர் பட்டியலில் தெரிகிறது. போனின் மீதமுள்ள வகைகள் அவற்றின் பழைய விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்பதும் தெளிவாகிறது.
விவோ எஸ் 1-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.18,990-க்கும்,
6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.19,990-க்கும் வாங்கலாம்.
போனின் அடிப்படை வேரியண்ட் ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் மலிவான விலையில் கிடைக்கிறது.
விவோ எஸ் 1 Android Pie உடன் ஃபன்டூச் ஓஎஸ் 9-ல் இயங்குகிறது. இது 1 6.38 அங்குல முழு எச்டி + (1080x2340 பிக்சல்கள்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது. விவோ எஸ் 1 MediaTek Helio P65 செயலியுடன் 4 ஜிபி / 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
இந்த விவோ போன் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. பின்புறத்தில், 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. இது 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாவது சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போனில் 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
Vivo போனில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் உள்ளது. இது 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 159.53 × 75.23 × 8.13 மில்லிமீட்டர் மற்றும் 179.5 கிராம் எடையுள்ளவை.
In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features