ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பில் முண்ணனியில் இருக்கும் விவோ நிறுவனம் தற்போது விவோ நெக்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது
ஸ்மார்ட் போன்கள் தயாரிப்பில் முண்ணனியில் இருக்கும் விவோ நிறுவனம் தற்போது விவோ நெக்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனின் விலை ரூபாய் 44,990 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம் தனது விவோ நெக்ஸ் மாடலை கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே சீனாவில் தனது நெக்ஸ் மாடல் போன்களை விவோ அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்த மாடல் விவோ நெக்ஸ் எஸ் மாடலின் மறுபதிப்பாக இது வெளியிடப்பட்டுள்ளது.
விவோ நெக்ஸ், பிற மாடல் போன்களை விட பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. X21ல் இருப்பது போன்று, ஆன் - ஸ்கிரீனில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், பாப் - அப் கேமரா கொண்டுள்ளது. இந்த போன் ஒன் பிளஸ் 6, சாம்சங் கேலக்ஸி எஸ்9 மாடல்களுக்கு போட்டியாக இருந்தாலும் இதன் விலை அதிகம் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போன் வரும் ஜூலை 21ம் தேதி முதல், அமேசான், விவோ இந்தியா ஆன்லைன் இணையதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்டு, ஃபன் டச் ஓ.எஸ் v4.0 மூலம் இயங்குகிறது.
![]()
இதில் இரண்டு நானோ சிம்கள் போடும் வசதி உள்ளது. 6.59 இஞ்ச் சூப்பர் அமோல்டு டிஸ்பிளே, முழு ஹெச்.டி மற்றும் 91.2% ஸ்கிரீன் டூ பாடி விகிதாச்சாரம் கொண்டுள்ளது. குவால்கம் 845 பிராசசர், 8 ஜிபி ரேம், அட்ரினோ 630 GPU பெற்றுள்ளது.
8 எம்பி செல்பி கேமரா உடன் f/2.0 அபெர்ச்சர், 12 எம்பி + 5 எம்பி இரட்டை பின்பக்க கேமரா உடன் f/1.8 அபெர்ச்சர் மற்றும் f/2.4 அபெர்ச்சர் இருக்கிறது. இந்த மாடலில் 128 ஜிபி உள்ளடக்க மெமரி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Google Launches UCP Protocol Designed to Enable Direct Purchases Within Google Search