விவோ நெக்ஸ் ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது. அமேசான் மற்றும் விவோ நிறுவனத்தின் இணையதளத்தில் வாங்க முடியும். குறிப்பிட்ட சில மொபைல் விற்பனை நிலையங்களிலும், விவோவின் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். இந்த மொபைலின் விலை 44,990 ரூபாய். விவோ நெக்ஸ் எஸ் ஹை எண்ட் பிரீமியம் ஸ்மார்ட்ஃபோனின், மறு உருவாக்கம் தான் இந்த நெக்ஸ். மேலே தனியாக நீட்டிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செல்ஃபி கேமரா இதன் ஈர்க்கும் அம்சமாக இருக்கிறது.
தொடக்க ஆஃபர்கள்:
44,990 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்டோனின் முன்பதிவு வியாழன் அன்று தொடங்கியது. ஆஃபர்களை என்று பார்த்தால், பழையஃபோன்களை எக்ஸ்சேஞ் செய்து கொள்ள 5,000 ரூபாய் ஆஃபர் தருகிறது விவோ. மேலும், ஒரே முறை மட்டும் இலவசமாக திரையை மாற்றி தரும் சேவையும் தருகிறது. ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் இல்லா 12 மாத இ.எம்.ஐ ( இ.எம்.ஐ இல்லாமலும் கிடைக்கும்) வாங்கினால் 4,000 ரூபாய் வரை தள்ளுபடியும் கிடைக்கிறது. டெபிட் கார்டுக்கும் இது பொருந்தும். மேலும், ஜியோவில் 198 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால், ரூபாய் 1,950 மதிப்புள்ள 39 ரீச்சார்ஜ் வவுச்சர்களும் கொடுக்கப்படுகின்றன.
சிறப்பம்சங்கள்:
டூயல் சிம் நேனோ சிம் ஸ்லாட்கள் கொண்ட நெக்ஸ், ஃபன்டச் 4.0 இயங்குதளம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. 6.9 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ திரை, சூப்பர் அமோல்டு 'அல்ட்ரா ஃபுல் வியூ' உடன்ன் வருகிறது. 845 ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராஸசரும், 8 ஜி.பி ரேமும் இணைந்து வேகத்தை அதிகரிக்கின்றன. மேலும், தனியாக மேலே நீளும் வகையில் உள்ள பாப் அப் செல்ஃபி. 8 மெகா பிக்சல் கேமரா, ஏ.ஆர் ஸ்டிக்கர்கள் மற்றும் ஃபேஸ் பியூட்டி அப்ளிகேஷனும் உடன் வருகிறது. 12 மெகா பிக்சல் டூயல் பின்புற கேமராவும் உள்ளது. நான்கு ஆக்சிஸ் OIS மற்றும் டூயல் கோர் 24 மில்லியன் படங்கள் தொழில்நுட்பமும் இந்த கேமராவின் சிறப்பு.
விவோ நெக்ஸ் மொபைல் எப்படி?
128 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஃபோனில், மைக்ரோ எஸ்.டி ஸ்லாட் இல்லை. நெட்வொர்க்கை பொறுத்தவரை 4ஜி வோல்ட், வைஃபை 802.11 ஏ.சி, ப்ளூடூத் வி 5.0, டைப் சி யூ.எஸ்.பி ஆகியவை உள்ளன. ஆக்செலரோமீட்டர், லைட் சென்சார், கைரோஸ்கோப், டிஜிட்டல் காம்பஸ் மற்றும் பிராக்ஸிமிட்டி சென்சார்களும் இந்த ஸ்மார்ட்ஃபோனில் இடம் பிடிக்கின்றன. இது போக ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும் இதில் இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்