விவோவின் புதிய ஸ்மார்ட்போனான Vivo Nex 3S 5G இறுதியாக அறிமுகமாகியுள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Vivo Nex 3-யின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். Vivo Nex 3S 5G அதன் முந்தைய வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
Vivo Nex 3S 5G's 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் CNY 4,998 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.50,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் CNY 5,298 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,000) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது நீலம், கருப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய மூன்று வண்ணங்களில் வருகிறது. மார்ச் 14 என்று சீனாவில் விற்பனை தொடங்கும், ஆனால் விவோவின் புதிய முதன்மை போனை இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் வருவது குறித்து எந்த தகவலும் இல்லை.
டூயல்-சிம் (நானோ) Vivo Nex 3S 5G, Funtouch OS 10 உடன் Android 10-ல்இயக்குகிறது. போனின் முக்கிய அம்சம் அதன் 6.89-இன்ச் எச்டிஆர் 10 + முழு எச்டி + (1,080x2,256 பிக்சல்கள்) AMOLED வாட்டர்ஃபால் டிஸ்பிளே ஆகும். இந்த போன் ஆக்டா கோர் Qualcomm Snapdragon 865 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி LPDDR5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
Vivo Nex 3S 5G மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் பாப்-அப் செல்பி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது, அதனுடன் அதன் சொந்த எல்இடி ஃபிளாஷ் உள்ளது. கேமரா அமைப்பு, f/1.8 aperture உடன் 64 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது. மேலும், இது 16 மெகாபிக்சல் புகைப்படங்களை வழங்க குவாட்-செல் பிக்சல் பின்னிங் செய்கிறது. இது 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் மற்றொரு 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ், 20x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு, f/2.0 aperture உடன் 16 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது.
போனில் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உள்ளது. இதை மேலும் விரிவாக்க முடியாது. Vivo Nex 3S 5G, 44W அல்ட்ரா ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Bluetooth 5.1, Wi-Fi a/b/g/n/ac, dual-frequency GPS, GLONASS மற்றும் Galileo ஆகியவை அடங்கும். ஆச்சரியம் என்னவென்றால், Vivo Nex 3S 5G 3.5mm headphone jack-ஐ வைத்திருக்கிறது. அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது, அதே நேரத்தில் போனின் உள்ள சென்சார்களில் accelerometer, gyroscope, compass, proximity சென்சார் மற்றும் ambient light சென்சார் ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்