Photo Credit: Tecno
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Tecno Pop 9 5G செல்போன் பற்றி தான்.
Tecno Pop 9 5G செல்போன் இந்தியாவில் செப்டம்பர் 2024ல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி, 128ஜிபி மெமரியுடன் வெளியிடப்பட்டது. இப்போது அதிக ரேம் கொண்ட புதிய Tecno Pop 9 5G மாடலை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மாடல் 128 ஜிபி மெமரியுடன் வருகிறது. இது 12 ஜிபி வரை ரேம் விரிவாக்க அம்சத்தை சப்போர்ட் செய்கிறது. இந்த போன் MediaTek Dimensity 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைப் பெறுகிறது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமெமரியுடன் கூடிய டெக்னோ பாப் 9 5ஜியின் விலை ரூ.10,999க்கு ஆரம்பம் ஆகிறது. ஜனவரி 8 ஆம் தேதி மதியம் 12 மணி அமேசான் இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்தது. இந்த விலையானது வங்கிச் சலுகைகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது .
பேஸிக்மாடல் 4GB + 64GB மற்றும் 4GB + 128GB மாடல் விலை ரூ. 9,499 மற்றும் ரூ.9,999 ஆகும். இது அரோரா கிளவுட், அஸூர் ஸ்கை மற்றும் மிட்நைட் ஷேடோ வண்ண விருப்பங்களில் இந்த போன் வழங்கப்படுகிறது. 2 Free Skin இதனுடன் வருகிறது.
டெக்னோ பாப் 9 5ஜி அம்சங்கள்
Tecno Pop 9 5G ஆனது 6.67-இன்ச் HD LCD திரையைக் கொண்டுள்ளது. இது 6nm octa-core MediaTek Dimensity 6300 SoC மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான மெமரியை கொண்டுள்ளது. ரேமை கிட்டத்தட்ட 12ஜிபி வரை விரிவாக்க முடியும். இது ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது.
டெக்னோ பாப் 9 5ஜி ஆனது 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்582 சென்சார் கேமரா மற்றும் பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் யூனிட் மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது. கைபேசியில் டால்பி அட்மாஸ் சப்போர்ட் உடன் இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் அகச்சிவப்பு (ஐஆர்) டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
Tecno Pop 9 5G ஆனது 18W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது NFC சப்போர்ட் செய்கிறது. தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP54 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. 189 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்