சாம்சங் தனது புதிய மாடலான சாம்சாங் W2019 ஃப்ளிப் போனை சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான சாம்சங், சாங்காய் நகரில் W2019 ஃப்ளிப் போனை அறிமுகம் செய்துள்ளது. W2018 வெற்றியை தொடர்ந்து இந்த W2019 ஃப்ளிப் போன் வெளியாகிள்ளது.
W2018-ல் 4.2 இன்ச் AMOLED டிஸ்பிளே பேனல்கள், ஸ்னாப்டிராகன் 835 மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருந்தது. இந்நிலையில் W2019 ஃப்ளிப் போனில் ஸ்னாப்டிராகன் 845 கொண்டு வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வருடத்தில் வெளிவந்த W2018 வெற்றியை தொடர்ந்து இந்த W2019 ஃப்ளிப் போன் வெளியாக உள்ளது. W2018-ல் 4.2 இன்ச் (1080x1920 பிக்ஸெல்ஸ்) புல் எச்.டி AMOLED டிஸ்பிளே பேனல்கள், ஸ்னாப்டிராகன் 835 மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருந்தது.
முந்தைய மாடலிலும் 6ஜிபி ரேம், 64 ஜிபி/256ஜிபி மெமரி மற்றும் SD கார்டு சப்போர்ட் உடன், 12 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்ட பின் பக்க கேமரா உடன் 5 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்ட முன்பக்க கேமரா மற்றும் 2,300mAh பேட்டரி கொண்டிருந்தது.
சாம்சங் W2019 ஃபிளப் போனானது, உயர் ரக சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் என தெரிகிறது. புல் எச்.டி AMOLED டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 845 கொண்டிருக்கும் என தெரிகிறது. பின்பக்கம் டூயல் கேமரா உடன் AI சென்சார் இருக்கலாம். மேலும், ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ தொடக்கத்திலும், பின்னர் ஆண்டராய்டு 9 பை க்கு அப்டேட் ஆகும் என தெரிகிறது.
இந்த வருடத்தில் வெளிவந்த கேலக்ஸி எஸ்9 மொபைலில் கொண்டிருந்த ஸ்னாப்டிராகன் வேரியண்ட் போல, W2019 மொபைலிலும் ஸ்னாப்டிராகன் 845 கொண்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்போனாது மெட்டல் பாடி கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் சீனாவில் தனது ஃப்ளிப் போனை அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. முதல் ஃப்ளிப் மொபைலானது கடந்த நவம்பர் 2016ல் ஸ்னாப்டிராகன் 820 கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு W2018 மாடலை வெளியட்டது. இதுவரை இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்