Samsung Galaxy Z Flip சாம்சங்கின் வரவிருக்கும் கிளாம்ஷெல்-ஸ்டைல் மடிக்கக்கூடிய போன் என்று வதந்தி பரவியுள்ளது.
Photo Credit: 91Mobiles
Samsung Galaxy S20, Galaxy S20+, Galaxy S20 Ultra ஆகியவை hole-punch டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளன
Samsung Galaxy S20, Galaxy S20+ மற்றும் Galaxy S20 Ultra ஆகியவை மார்ச் 6-ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று டிப்ஸ்டர் மேக்ஸ் வெயின்பாக் (Max Weinbach) திங்களன்று கூறினார். Galaxy S20 Ultra மற்றும் Galaxy Z Flip ஆகியவற்றின் எதிர்பார்க்கப்பட்ட விலையையும் டிப்ஸ்டர் பகிர்ந்து கொண்டார். வெயின்பாக்கின் கூற்றுப்படி, Galaxy Z Flip பிப்ரவரி 14-ஆம் தேதி அறிமுகமாகும். வெயின்பாக் விற்பனை தேதி அல்லது சாம்சங் போனை அதிகாரப்பூர்வமாக்கும் நாள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வெயின்பாக் சமீபத்திய வதந்திகளை ஒரு ட்வீட் நூலில் பகிர்ந்து கொண்டார். மேலும், Samsung Galaxy Z Flip மடிக்கக்கூடிய போன் $1400 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 99,500)-க்கு சில்லறை விற்பனை செய்யும் என்று கூறியது. வெயின்பாக்கின் கூற்றுப்படி, இந்த போன் அமெரிக்காவில் AT&T பிரத்தியேகமாக இருக்கும். ஆனால், பிரத்தியேக நேரம் முடிவடையும். எனவே, மற்ற ஆபரேட்டர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதை விற்க முடியும்.
நினைவுகூர, Samsung Galaxy Z Flip, சாம்சங்கின் வரவிருக்கும் கிளாம்ஷெல்-ஸ்டைல் மடிக்கக்கூடிய போன் என்று வதந்தி பரவியுள்ளது. இது Motorola Razr (2019)-ல் இருந்து எடுக்கப்படும். Galaxy Fold, Motorola Razr (2019) மற்றும் Huawei Mate X ஆகியவற்றில் இருக்கும் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக, இந்த போனில் கண்ணாடி டிஸ்பிளே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
வெயின்பாக்கின் Galaxy S20-சீரிஸ்க்கு வருகையில், Samsung Galaxy S20, Galaxy S20+ மற்றும் Galaxy S20 Ultra ஆகியவை மார்ச் முதல் வெள்ளிக்கிழமை, அதாவது மார்ச் 6 முதல் கிடைக்கும் என்று டிப்ஸ்டர் கூறுகிறது. Galaxy S20 Ultra, $ 1,300 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 92,400) விலைக் குறியீட்டைக் கொண்டு செல்லும் என்று டிப்ஸ்டர் மேலும் கூறியது.
கூடுதலாக, Galaxy S20-சீரிஸ் போன்களில் IP68 மதிப்பீட்டில் நீர்-எதிர்ப்பு இருக்கும் என்று வெயின்பாக் கூறியது. வெயின்பாக்கை நம்பப்பட வேண்டுமானால், வருங்கால Galaxy S20-சீரிஸ் வாங்குபவர்கள் போன்களில் முன்பே நிறுவப்பட்ட screen-protectors-ஐக் காணலாம்.
மேலும், டிப்ஸ்டரின் கூற்றுப்படி, சாம்சங் அதன் upcoming pair of truly wireless earbuds-ஆன Galaxy Buds+ஐ, $149.99 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10,700)-க்கு விற்கப்போகிறது. இவை Galaxy Buds மற்றும் மேம்பட்ட Active Noise Isolation-ன் பேட்டரி ஆயுளை இரட்டிப்பாக்கும் என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Gemini for Home Voice Assistant Early Access Rollout Begins: Check Compatible Speakers, Displays