இப்போது Samsung தனது வழக்கமான இரண்டு flagships 2019 ஆம் ஆண்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் வெளியீட்டு அட்டவணையைப் பொறுத்தவரை, அடுத்த Galaxy S-series flagship - தற்காலிகமாக Samsung Galaxy S11 என அழைக்கப்படுகிறது. இது 2019 முதல் காலாண்டில் வரவேண்டியது. ஆனால், புதிய அறிக்கையின்படி, பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் Samsung Galaxy S11 வெளியிடப்படலாம் என தெரியவருகிறது. இது அடுத்த ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் Galaxy Unpacked நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy S11 வெளியீட்டு தேதி (எதிர்பார்க்கப்படும்)
ஆனால் SamMobile அறிக்கையின்படி, பிப்ரவரி 2020 மூன்றாவது வாரம் Galaxy S11 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். மேலும் குறிப்பாக, Galaxy S11 பிப்ரவரி 18, 2020 அன்று விற்பனைக்கு வரும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
Samsung Galaxy S11 நிறுவனத்தின் சொந்த 108-megapixel ISOCELL HMX sensor-ஐப் பயன்படுத்த முனைகிறது. 5x optical zoom அனுமதிக்கும் ஒரு periscope-style கேமரா தொகுதியைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மங்கலான அல்லது விலகல் இல்லாமல் விரிவான நீண்ட தூர காட்சிகளைப் பிடிக்க OIS (Optical Image Stabilisation)-வை நம்பியிருக்கும். சாம்சங்கின் 5x optical zoom கேமரா தொகுதி மிகவும் மெல்லியதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்