பயன்பாட்டாளரின் அனுமதி இல்லாமல், போன் காலரியில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சாம்சங் மெசேஜிங் ஆப்பில் வழியே பகிரப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
சாம்சங் காலெக்சி எஸ்9, காலெக்சி நோட்8 பயன்படுத்துபவர்கள் அதிகமாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், பிரச்சனைக்கான உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக சாம்சங் நிறுவன தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சாம்சங் அளிக்கும் மெசேஜிங் ஆப்பில், ஸ்டிக்கர்கள், ஆடியோ, புகைப்படம், வீடியோ ஆகியவற்றை அனுப்பும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிளின் மெசேஜ், கூகுளின் ஆண்டுராய்டு மெசேஜ் செயலிகளை விடவும் மேம்பட்ட வசதிகளை சாம்சங் ஆப் கொண்டுள்ளது.
சாம்சங் காலெக்சி எஸ்9 பயன்படுத்தும் வாடிக்கையாளரின் போனில் இருந்து, காலரியில் உள்ள அனைத்து ஃபைல்களும் மெசேஜிங் ஆப் வழியே மற்றொரு எண்ணிற்கு பகிரப்பட்டதாக என வாடிக்கையாளர் ஒருவர் Redditல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மெசேஜ் சென்று கொண்டிருப்பதை அறிய முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இரவு 2.30 மணியளவில் போனில் உள்ள காலரி கண்டெண்ட் அனைத்தும் மெசேஜ் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், மெசேஜ் ஆப்பில் அதற்கான சான்றுகள் இல்லை என மற்றுமொரு வாடிக்கையாளர் கூறினார். டி-மொபைல் லாக்ஸில் மட்டுமே அதற்கான சான்று கண்டறிய முடியும் என்றார்.
ஆண்டுராய்டு பத்திரிகை விசாரித்ததில், சாம்சங் காலெக்சி எஸ்9 மற்றும் நோட்8 வாடிக்கையாளர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பிற காலெக்சி ஸ்மார்ட் போன்களுக்கும் இந்த பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காலரியில் உள்ள ‘ஷேர்’ ஆப்ஷன் மூலம் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
செட்டிங்ஸ் > ஆப்ஸ் > சாம்சங் மெசேஜஸ் > பெர்மிஷன்ஸ்> ஸ்டோரேஜ் என்ற ஆப்ஷனுக்கு சென்று ஸ்டோரேஜ் பெர்மிஷன்களை முடக்கினால் இந்த பிரச்சனை ஏற்படாது என சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பாதிப்புக்கு பின் இந்த முயற்சியை செய்து எந்த பலனும் இருக்க போவதில்லை என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஸ்டோரேஜ் வசதியை முடக்கினால், சாம்சங் மெசேஜ் ஆப்பினை பயன்படுத்த முடியாது. எனவே, இதற்கான சரியான தீர்வை சாம்சங் நிறுவனம் கொண்டு வரவேண்டும். அது வரையில், சாம்சங் மெசேஜிங் ஆப்பினை முடக்கிவிட்டு வேறு மெசேஜிங் ஆப் பயன்படுத்தலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்