இந்தியாவில் சாம்சங் 'கேலக்சி M40' இன்று அறிமுகமாகவுள்ளது. இந்த 'கேலக்சி M40' ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு ஜூன் 11-ஆன இன்று மாலை 6 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி முன்னதாகவே சாம்சங் நிறுவனம் பல டீசர்களை வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படியில், இந்த ஸ்மார்ட்போன் இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) மற்றும் 3 பின்புற கேமராக்களுடன் வெளியாகவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்த டீசர்களில், சாம்சங் நிறுவனம் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர், 32 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொன்ற அம்சங்களை கொண்டுள்ளது என்பதை தெரிவித்திருந்தது. சாம்சங் M தொடரில், இது நான்காவது ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் 'கேலக்சி M40': அறிமுக நிகழ்வு!
சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன், ஜூன் 11-ஆம் தேதியான் இன்று மாலை 6 மணிக்கு அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை மேலும் தெரிந்துகொள்ள கேட்ஜெட்ஸ் 360-யுடன் இணைந்திருங்கள்.
சாம்சங் 'கேலக்சி M40': எதிர்பார்க்கப்படும் விலை!
சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன், இன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது. இதன் விலை பற்றி இன்னும் எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், ஒரு மாதம் முன்பே சாம்சங் இந்தியாவில் மூத்த துணைத் தலைவர் ஆசிம் வார்சி (Asim Warsi), கேட்ஜெட்ஸ் 360-க்கு அளித்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 20,000 ரூபாயில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் 'கேலக்சி M40': எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!
இந்த சாம்சங் 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் இன்பினிடி-ஓ திரை (Infinity-O Display) மற்றும் 3 பின்புற கேமராக்களுடன் வெளியாகவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்ட் 9 பை (Android 9 Pie) அமைப்பை கொண்டுள்ளது. இதன் திரை 6.3-இன்ச் FHD+ திரையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
முன்னதாக சாம்சங் இந்தியாவின் ஆசிம் வர்சி, கேட்ஜெட்ஸ் 360-க்கு அளித்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதன் மற்ற கேமராக்கள் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தின் மூன்று கேமராக்களில், 32 மெகாபிக்சல் கேமராவுடன் 5 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் கேமராக்கள் இருக்கும், மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும் என்றவாறான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
ஸ்னேப்ட்ராகன் 675 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படும் இந்த 'கேலக்சி M40' ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB செமிப்பு அளவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 3500mAh பேட்டரி அளவை கொண்டு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்