சாம்சங் கேலக்ஸி எம் 31 இன்று மதியம் 1 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான மூன்று முக்கிய காரணங்களை வெளிப்படுத்தியுள்ளது, இதில் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே, 6,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பு ஆகியவை அடங்கும்.
சாம்சங் கேலக்ஸி எம் 31-ன அடிப்படை 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,999-ல் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜுடனும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் மார்ச் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy M31-க்கான வெளியீட்டு லைவ் ஸ்ட்ரீம் இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கும். சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இதை நீங்கள் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யலாம், மேலும் நாங்கள் லைவ் ஸ்ட்ரீமை கீழே வழங்குகிறது. இது தவிர, வெளியீட்டில் இருந்து நேரடி அப்டேட்டுகளை இங்கே காணலாம்.
Samsung கேலக்ஸி எம் 31, 6.4 இன்ச் முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் டிஸ்பிளே முன்பக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைந்து எக்ஸினோஸ் 9611 SoC-யால் இயக்கப்படும். கூடுதலாக, ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை ஸ்டோரேஐ விரிவுபடுத்த முடியும்.
கேலக்ஸி எம் 31-ன் டீஸர்களைப் பார்ப்பதன் மூலம், 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சாதனம் 159.2x75.1x8.9 மிமீ அளவு மற்றும் சுமார் 191 கிராம் எடையுள்ளதாக இருக்கும். இந்த போன் நீல மற்றும் கருப்பு வண்ண ஆப்ஷன்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி எம் 31, பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், முதன்மை கேமரா f/1.8 aperture கொண்ட 64 மெகாபிக்சல் ஷூட்டராக இருக்கும் என்றும் டீஸர்கள் தெரிவிக்கின்றன. மற்ற மூன்று கேமராக்களில் f/2.2 aperture கொண்ட 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, f/2.2 aperture கொண்ட 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா, மற்றும் f/2.4 aperture கொண்ட மற்றொரு 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தைப் பொறுத்தவரை, f/2.0 aperture கொண்ட 32 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கப்போகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்