இந்தியாவில் தனது பட்ஜெட் தயாரிப்பான கேலக்ஸி எம் 30 ஸ்மார்ட்போனை இன்று மாலை 6 மணி அளவில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். அந்நிறுவனத்தின் எம் வரிசையில் வெளியாகும் போன்களில் இந்த எம்30 போன் மூன்றாவது. மூன்று பின்புற கேமராக்கள், 5000mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் கொண்டுள்ளது என தொட்ர்ந்து இந்த போன் குறித்து தகவல்கள் கசிந்து வந்த நிலையில், இதுவரை நமக்கு கிடைத்த தகவல்களைப் பார்ப்போம்.
கசிந்துள்ள தகவல்கள்படி, இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்30-யின் விற்பனை ரூ.15,000-இல் இருந்து துவங்கும் எனப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எம்20 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்10 போன்களின் ஆரம்ப நிலை ரேம் கொண்ட போனின் விலையைப்போல இந்த போனுக்கும் விலை இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மாரட்போன் 6.4 இஞ்ச் ஹெச்டி திரை கொண்டிருக்கும். சூப்பர் அமொலெட் இன்ஃபினிட்டி-யூ திரை மற்றும் எக்யநாஸ் 7904 பிராசஸரால் இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த போனில் 4 மற்றும் 6 ஜிபி ரேம்கள் இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது. கேமரா வசதிகளைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம் 30, மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளதாகவும் அவைகள் 13 / 5 / 5 மெகா பிக்ச்ல் கேமராக்களாக இருக்கும் எனவும் தெரிகிறது. கறுப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த போனை எதிர்பார்க்கலாம். இதில், ஏற்கெனவே நீலத்தின் மாதிரி, போன் குறித்து வெளியான டீசரில் பார்க்க முடிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்