இந்தியாவில் இம்மாதம் வெளியாகும் மூன்றாவது சாம்சங் எம் தயாரிப்பு இதுவே!
6.4 இஞ்ச் திரை மற்றும் அமோலெட் இன்ஃபினிட்டி-யூ டிஸ்பிளேவை இந்த போன் கொண்டிருக்கும்
சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி மாலை 6 மணிக்கு, இந்தியாவில் அறிமுகமாகும் செய்யப்படும் என நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் வெளியிட்டுள்ள தகவல்படி, இதற்கு முன்னர் வெளியான எம்10 மற்றும் எம்20, இன்ஃபினிட்டி-வி வகை திரையைக் கொண்டுள்ள நிலையில் தற்போது வெளியாகும் கேலக்ஸி எம்30 இன்ஃபினிட்டி-யூ ஆக அறிமுகம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் அதன் திரை அளவையும் வெளியிட்டுள்ளது சாம்சங்.
கேலக்ஸி எம்10 மற்றும் எம்20 இல் எல்.சி.டி திரைகள் இருந்த நிலையில் கேலக்ஸி எம்30, இன்னும் மேன்படுத்தப்பட்ட திரை இருக்க நிறைய வாய்புள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்படி, பின்புறத்தில் 3 கேமராக்கள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போன், அமேசான் மற்றும் சாம்சங் இணையதளங்களில் விற்பனை செய்யப்படும்.
5,000mAh பவர் கொண்ட பேட்டரி,16 மெகா பிக்சல் முன்புற கேமரா, 13 மெகா பிக்சல்/ 5 மெகா பிக்சல் / 5 மெகா பிக்சல் என மூன்று பின்புற கேமராக்களுடன் இந்த போன் விற்பனைக்குத் தயாராக உள்ளது.
ஏற்கெனவே இந்தத் தயாரிப்பின் பல அம்சங்கள் வெளியாகியுள்ள நிலையில் சுமார் 15,000 ரூபாய் வரை இதன் விலை மதிப்பு இருக்கும் என எதிர்பார்கபடுகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகும் சியோமி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு வெளியாகின்ற நிலையில் இரு நிறுவனங்களுக்குள் பலத்தப் போட்டி நிலவும் என்பது உறுதி.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Magnetic Control of Lithium Enables Safer, High-Capacity “Dream Battery” Without Explosion Risk