சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 11 ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகம்!

சாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 11 ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகம்!

கேலக்ஸி எம் 11 டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது

ஹைலைட்ஸ்
  • இந்த இரண்டு போன்களும் ரூ.10,000-க்கும் குறைவாக அறிமுகப்படுத்தப்படும்
  • இவை ஜூன் மாதத்தில் தொடங்கப்படும்
  • இந்த போன்களில் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே இருக்கும்
விளம்பரம்

Samsung-ன் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம் 01 ஜூன் முதல் வாரத்தில் சந்தைக்கு வருகிறது. அதவுடன் சாம்சங் Galaxy M11 ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு வரும். தென் கொரிய நிறுவனம் இந்த இரண்டு போன்கலையும் இந்தியாவில் ரூ.10,000-க்கும் குறைவாக அறிமுகப்படுத்தும்.


சாம்சங் கேலக்ஸி எம் 01 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 11 ஆகியவற்றின் விலை:

91 மொபைல்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த இரண்டு போன்களும் இந்தியாவில் ரூ.10,000-க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும். Redmi 8A மற்றும் Realme C3 போன்ற பட்ஜெட் போன்களுடன் போட்டியிட, சாம்சங் இந்த இரண்டு போன்களையும் அறிமுகம் செய்யும்.


சாம்சங் கேலக்ஸி M01 விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எம் 01, 5.71 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த போனில் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் இருக்கும். 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும். போனின் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் மற்றும் பின்புறத்தில் ஒரு கேமரா இருக்கும். போனின் உள்ளே 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதனுடன் 5W சார்ஜிங் இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம் 11 விவரங்கள்:

டூயல்-சிம் கேலக்ஸி எம் 11, 6.4 இன்ச் எச்டி + டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் இருக்கலாம். இந்த போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.

கேலக்ஸி எம் 11 பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 13 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. மேலும், 5 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

இணைப்பிற்காக, இந்த போனில் 4 ஜி, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பீடோ மற்றும் கலிலியோ உள்ளன. போனின் உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.


Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

விளம்பரம்

© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »