மெல்லிய உளிச்சாயும் காட்சி பேனல்கள் தற்போது வரவேற்பை பெறுகிறது. முன்னணி சென்சார், செல்ஃபி கேமரா, சிறந்த ஒளி மற்றும் அழகான காது வடிவமைப்பு இப்போதைய நுட்பங்களாகும். இவற்றையும் தாண்டி, இப்போது சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் முழு திரை அலைபேசியின் முதல் மாதிரியை டிஸ்ப்ளே வாரம் 2018-த்தில் காண்பித்தனர். பீஜோஎலெக்ட்ரிக் தொழில்நுட்பம் இதில் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
அடுத்த வருட தொடக்கத்தில், புது தொழில்நுட்பம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மே மாதத்தில் நடந்த டிஸ்ப்ளே வாரத்தில், "சௌண்ட் ஆன் டிஸ்ப்ளே" எனப்படும் மாதிரியை அறிவித்தது. குழுவின் பரிமாற்ற அலைவரிசை 100 ~ 8000 ஹெர்ட்ஸ் வரம்பிற்கு இடையில் வந்துள்ளது. மேலும், பயனர்கள் காட்சிக்கு தங்கள் காதுகளை வைக்கையில் மட்டுமே ஒலி கேட்கும். இது பாரம்பரிய உரையாடலின் மூலம் கேட்பவர்களின் உரையாடல்களை தனிப்பட்டதாக மாற்றுவதற்கு உதவும்.
இதற்கிடையில், எல்.ஜி. நிறுவனம் சிஈஎஸ் 2018-இல் 88-அங்குலம் கொண்ட மாதிரியைக் காண்பித்தது. இதன் மூலம், சிறந்த ஒலியை பெற அமைக்கப்பட்டது. மேலும், சாம்சங் கேலக்ஸி எஸ் 10-த்தில் உள்ள பீஜோஎலெக்ட்ரிக் ஒலிப்பெருக்கி சிறப்பான அம்சங்களை கேட்பவர்களுக்கு தருகிறது.
இதே போல், ஜியோமி, விவோ மாதிரிகள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வண்ணம் புது நுட்பங்களை வெளியிடுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்