Samsung நிறுவனம் மடக்கக்கூடிய வகையில் புதிய போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறை Galaxy Z சீரிஸ் இந்தியாவில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 என இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த Galaxy Unpacked நிகழ்வில் Galaxy AI அம்சங்கள், Google Circle to Search அம்சம் மற்றும் Gemini AI சாட்பாட் இந்த செல்போன்களில் சப்போர்ட் செய்யும் என கூறப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 மூலம் இயங்கப்படுகிறது. Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 இரண்டுக்கும் ஏழு வருட ஆண்ட்ராய்டு OS மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.
Samsung Galaxy Z Fold 6
12GB RAM மற்றும் 256GB மெமரி 1,58,600 ரூபாய்
12GB RAM மற்றும் 512GB மெமரி 1,68,600 ரூபாய்
12GB RAM மற்றும் 1 TB மெமரி 1,88,700 ரூபாய்
Samsung Galaxy Z Flip 6
12GB RAM மற்றும் 256GB மெமரி 91,800 ரூபாய்
12GB RAM மற்றும் 512GB மெமரி 1,01,800 ரூபாய்
Samsung Galaxy Z Fold 6 நேவிபிங்க் மற்றும் சில்வர் ஷேடோ விருப்பங்களில் கிடைக்கிறது. அதே நேரத்தில் Galaxy Z Flip 6 நீலம், புதினா, சில்வர் ஷேடோ மற்றும் மஞ்சள் வண்ணங்களில் கிடைக்கும். சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் கைபேசிகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Crafted Black மற்றும் White custom Galaxy Z Fold 6 வண்ணங்கள் கிடைக்கும்.
Samsung Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 ஆகிய இரண்டிற்கும் முன்கூட்டிய ஆர்டர்கள் தொடங்கிவிட்டது. ஜூலை 24ல் ஆர்டர் செய்தவர்களுக்கு செல்போன் கையில் கிடைக்கும்.
ஆண்ட்ராய்டு 14ல் இயங்கும் சாம்சங்கின் One UI 6.1.1 மூலம் இயங்குகிறது. மேல் பக்கம் 6.3-inch HD+ (968x2,376 pixels) Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டுள்ளது. உட்புறத்தில் 7.6-இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இரண்டு பேனல்களும் 1Hz மற்றும் 120Hz வரையிலான அடாப்டிவ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளன. பின்பக்கம் 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. மேலும் கவர் ஸ்கிரீனில் 10எம்பி கேமராவும், இன்னர் டிஸ்பிளேவில் 4எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவும் உள்ளது. 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 25Wல் சார்ஜ் செய்யக்கூடிய சாம்சங்கின் வயர்டு சார்ஜருடன் தனித்தனியாக விற்கப்படுகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP48 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. 239g எடையுடனும் இருக்கும்.
இதுவும் Android மற்றும் One UI மூலம் இயங்குகிறது. 3.4-inch (720x748 pixels) Super AMOLED கவர் திரையை கொண்டுள்ளது. உட்புறத்தில், இது 6.7-இன்ச் முழு-எச்டி+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1Hz மற்றும் 120Hz வரையிலான புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.
வெளிப்புறத்தில், Galaxy Z Flip 6 ஆனது இரட்டை பிக்சல் ஆட்டோஃபோகஸ் 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமராவுடன், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது.
4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP48 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது மடிந்தால் 85.1x71.9x14.9mm அளவையும், மடிக்கும்போது 165.1x71.9x6.9mm அளவையும் பெறுகிறது. 187g எடை வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்