Samsung Galaxy Z Fold 6 Slim செப்டம்பர் 25 அன்று சீனா மற்றும் கொரியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy Z Fold 6 Slim செல்போன் பற்றி தான்.
Samsung Galaxy Z Fold 6 Slim செப்டம்பர் 25 அன்று சீனா மற்றும் கொரியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Galaxy Z Fold 6 ஸ்லிம் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Chosun டெய்லி வெளியிட்ட அறிக்கையின்படி , Samsung Galaxy Z Fold 6 Slim தென் கொரியாவில் செப்டம்பர் 25 அன்று அறிமுகப்படுத்தப்படும். இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து பின்னர் சீனாவில் வெளியிடப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்தியா, சிங்கப்பூர், யுஎஸ் மற்றும் யுகே போன்ற பிற பகுதிகள் எஞ்சியிருக்கும் நிலையில் இந்த இரண்டு சந்தைகளில் மட்டுமே இந்த சாதனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு 4 முதல் 5 லட்சம் யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Galaxy Club அறிக்கையின்படி , Z Fold 6 ஸ்லிம் 5 மெகாபிக்சல் முன்பக்கக் கேமராவைக் கொண்டிருக்கக்கூடும். இது Galaxy Z Fold 6 மாடலில் உள்ள 4-மெகாபிக்சல் ஷூட்டரை விட மேம்படுத்தப்பட்டதாகும். மேலும் கவர் டிஸ்ப்ளே கேமரா அதே 10 மெகாபிக்சல் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் இருக்கும். டைட்டானியம் பேக் பிளேட்டைக் கொண்டிருக்கலாம்.
ஆண்ட்ராய்டு 14ல் இயங்கும் சாம்சங்கின் One UI 6.1.1 மூலம் இயங்குகிறது. மேல் பக்கம் 6.3-inch HD+ (968x2,376 pixels) Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டுள்ளது. உட்புறத்தில் 7.6-இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மடிக்கும்போது 11.5 மிமீ அகலம் இருக்கும். இது 8-இன்ச் இன்டர்னல் டிஸ்ப்ளே மற்றும் 6.5-இன்ச் எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 இன் 7.6-இன்ச் இன்டர்னல் மற்றும் 6.3-இன்ச் எக்ஸ்டர்னல் ஸ்கிரீன்களில் இருந்து சிறிது மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது .இரண்டு பேனல்களும் 1Hz மற்றும் 120Hz வரையிலான அடாப்டிவ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளன. பின்பக்கம் 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது.
மேலும் கவர் ஸ்கிரீனில் 10எம்பி கேமராவும், இன்னர் டிஸ்பிளேவில் 4எம்பி அண்டர் டிஸ்பிளே கேமராவும் உள்ளது. 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 25Wல் சார்ஜ் செய்யக்கூடிய சாம்சங்கின் வயர்டு சார்ஜருடன் தனித்தனியாக விற்கப்படுகிறது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP48 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Redmi Turbo 5, Redmi Turbo 5 Pro to Be Equipped With Upcoming MediaTek Dimensity Chips, Tipster Claims