டூயல் ரியர் கேமராவுடன் வெளியானது Samsung Galaxy Z Flip...! 

டூயல் ரியர் கேமராவுடன் வெளியானது Samsung Galaxy Z Flip...! 

Galaxy S20 சீரிஸுடன் Samsung Galaxy Z Flip அறிமுகப்படுத்தப்பட்டது

ஹைலைட்ஸ்
 • Samsung Galaxy Z Flip இரண்டு டிஸ்பிளேக்களைக் கொண்டுள்ளது
 • குறைந்த தெளிவுத்திறனுடன், வெளிப்புறத்தில் இரண்டாவது டிஸ்பிளே உள்ளது
 • Samsung Galaxy Z Flip பெயரிடப்படாத பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது

Samsung Galaxy Z Flip செவ்வாயன்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிறுவனத்தின் Galaxy S20 ப்ளாஷ்கிரிப் சீரிஸ் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. தென் கொரிய நிறுவனம் இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், Galaxy Z Flip நிறுவனம் இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே என்று அழைக்கும் Ultra Thin Glass (UTG)-ஐக் கொண்டுள்ளது. யூடியூப் பிரீமியத்தை வாங்குபவர்களுக்கு, அணுகலை வழங்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.


Samsung Galaxy Z Flip விலை:

Samsung Galaxy Z Flip-ன் விலை $1,380 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.98,400) ஆகும். பிப்ரவரி 14 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் தொடங்கி, குறைந்த அளவுகளில் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இது Mirror Gold-ல் கிடைக்கும் முன்பு, ஆரம்பத்தில் Mirror Black மற்றும் Mirror Purple ஆகியவற்றில் கிடைக்கும் என்று Samsung கூறுகிறது.


Samsung Galaxy Z Flip விவரக்குறிப்புகள்:

Samsung Galaxy Z Flip, ஒரு eSIM மற்றும் ஒரு Nano-SIM கார்டு ஸ்லாட் கொண்ட டூயல்-சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இது Android 10-ல் இயங்குகிறது. மடிக்கக்கூடிய டிஸ்பிளே 6.7-inch full-HD (1080x2636 pixels, 21.9:9, 425ppi) Dynamic AMOLED பேனல் – நாம் குறிப்பிட்டபடி Infinity Flex டிஸ்பிளே என்று அழைக்கப்படுகிறது. வெளிப்புறத்தில், 112x300 pixels தெளிவுதிறன் மற்றும் pixel density of 303ppi உடன் 1.1-inch Super AMOLED டிஸ்பிளே உள்ளது. இது 8GB RAM உடன் இணைக்கப்பட்டு, பெயரிடப்படாத 7nm octa-core SoC-யால் இயக்கப்படுகிறது.

Galaxy Z Flip-ன் டூயல் ரியர் கேமரா அமைப்பில், (f/1.8, 1.4-micron pixels, 78-degree FoV) உடன் 12-மெகாபிக்சல் wide-angle கேமரா மற்றும் (f/2.2, 1.12-micron pixels, 123-degree FoV, OIS) உடன் 12-மெகாபிக்சல் ultra-wide angle கேமரா ஆகியவை அடங்கும். Samsung Galaxy Z Flip-இன் முன்புறத்தில் (f/2.4, 1.22-micron pixels, 80-degree FoV) உடன் 10-மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Samsung Galaxy Flip-ல் 256GB இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை microSD card வழியாக விரிவாக்கம் செய்ய முடியாது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, USB Type-C, NFC, MST மற்றும் GPS (A-GPS) ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light sensor, barometer, fingerprint sensor (on the side), gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.

Samsung Galaxy Z Flip மடிக்கும் போது 87.4x73.6x17.33mm மற்றும் திறக்கும் போது 167.3x73.6x7.2mm அளவீட்டைக் கொண்டுள்ளது. இதன் எடை 183 கிராம் ஆகும். ஸ்மார்ட்போனில் ஒற்றை, மோனோ ஸ்பீக்கர் உள்ளது. இது ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 3,300mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

Galaxy Z Flip-ல் கூகிள் உடன் இணைந்து கட்டப்பட்ட Flex mode UI அடங்கும். இது 'Hideaway Hinge' மூலம் இயக்கப்படுகிறது, இது Galaxy Z Flip-ஐ பல கோணங்களில் திறந்து வைக்க பயனர்களை அனுமதிக்கிறது. இந்த hinge 'இரட்டை CAM பொறிமுறையுடன்' உள்ளது, மேலும் அழுக்கு மற்றும் தூசியைத் தடுக்க நைலான் இழைகளால் ஆன 'sweeper' தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. hinge மற்றும் டிஸ்பிளே 2,00,000 முறை திறக்க மற்றும் மூட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Galaxy Z Flip-ல் உள்ள Flex mode பிரதான மடிக்கக்கூடிய டிஸ்பிளேவை 'இரண்டு 4 அங்குல திரைகளாக' பிரிக்கிறது - அதன் சாத்தியமான பயன்பாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு, ஒரு YouTube வீடியோவை மேல் பாதியில் பார்ப்பது, அதே நேரத்தில் மற்ற வீடியோக்களை கருத்து தெரிவிக்கும் போது அல்லது கீழ் பாதியில் கண்டுபிடிக்கும்.

Galaxy Z Flip-ஐ, ஓரளவு மடித்து, ஒரு மேற்பரப்பில் வைப்பதன் மூலம் பயனர்கள் செல்ஃபிக்களைப் பிடிக்க முடியும். 1.1 அங்குல கவர் டிஸ்பிளே அறிவிப்புகளைக் காண்பிக்கும். Flex mode-ஐப் போன்ற ஒன்று மல்டி-ஆக்டிவ் விண்டோ ஆகும், இது பயனர்களை பிரதான டிஸ்பிளேவின் வெவ்வேறு பகுதிகளுக்கு இழுத்து விட அனுமதிக்கிறது, ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை பயன்படுத்துகிறது. Samsung Pay, Samsung Health, Samsung Knox மற்றும் பல அம்சங்கள் அடங்கும்.

Advertisement
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com