S26 சீரிஸ்ல Samsung-ன் மாஸ்டர் பிளான்! Bluetooth 6.1 சப்போர்ட்டுடன் Exynos S6568 சிப்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 30 அக்டோபர் 2025 12:59 IST
ஹைலைட்ஸ்
  • Galaxy S26 சீரிஸ்-ல் பிரத்யேக Exynos S6568 என்ற கனெக்டிவிட்டி சிப்
  • லேட்டஸ்ட் Bluetooth 6.1 மற்றும் Wi-Fi கனெக்டிவிட்டியை சாம்சங் வழங்கக்க
  • இந்த சிப் மூலம் மெயின் ப்ராசஸரின் சுமை குறையும்

Galaxy S26 Series: Exynos S6568, Bluetooth 6.1, மேம்பட்ட செயல்திறன்

Photo Credit: Samsung

Samsung ரசிகர்கள் எல்லாரும் ரொம்பவே எதிர்பார்த்துட்டு இருக்க விஷயம், அடுத்த வருஷம் வரப்போற Galaxy S26 சீரிஸ் தான். அந்த சீரிஸ் பத்தி தான் இப்போ ஒரு சூப்பரான தகவல் வெளியாகி இருக்கு. சாதாரணமா ஸ்மார்ட்போன்ல ப்ராசஸர் இருக்கும். அது தான் போனோட எல்லா வேலையையும் பார்க்கும். ஆனா, Samsung இப்போ Galaxy S26 சீரிஸ்ல, மெயின் ப்ராசஸரோட சேர்ந்து வேலை செய்யற மாதிரி, கனெக்டிவிட்டிக்காகவே தனியா ஒரு Exynos சிப்-ஐ கொடுக்கப் போறாங்கனு லீக் தகவல் சொல்லுது.

அந்த புதிய சிப் என்ன?

சமீபத்துல Exynos S6568 என்ற ஒரு புதிய சாம்சங் சிப்செட், Bluetooth SIG-வோட (Special Interest Group) வெப்சைட்டில் லிஸ்ட் ஆகியிருக்கு. அந்த லிஸ்டிங்கில், இந்த சிப் ஒரு "Bluetooth மற்றும் Wi-Fi கம்பானியன் சிப்"-ஆ இருக்கும்னு குறிப்பிடப்பட்டிருக்கு. அதாவது, இது மெயின் ப்ராசஸரோட (அது வரப்போகும் Exynos 2600-ஆ இருக்கலாம்) சேர்ந்து, வயர்லெஸ் கனெக்டிவிட்டிக்கான எல்லா வேலைகளையும் செய்யுமாம்.

இதோட ஸ்பெஷாலிட்டி என்ன?

இந்த Exynos S6568 சிப்போட முக்கியமான ஹைலைட் என்னன்னா, இது லேட்டஸ்ட் ஆன Bluetooth 6.1 ஸ்டாண்டர்டுக்கு சப்போர்ட் பண்ணுது. Bluetooth 6.1-ஆ? அதுல என்ன பெரிய விஷயம்னு கேட்குறீங்களா? முந்தைய வெர்ஷனை விட இதுல பாதுகாப்பு (Security) அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கும், முக்கியமா பவர் எஃபிஷியன்ஸி (Power Efficiency) ரொம்பவே நல்லா இருக்கும். அதாவது, பேட்டரி சார்ஜ் அதிகமா நிற்குறதுக்கு இது ரொம்பவே உதவியா இருக்கும்.

இன்னும் ஒரு முக்கிய விஷயம் என்னன்னா, Wi-Fi மற்றும் Bluetooth கனெக்டிவிட்டி வேலைகளை இந்த பிரத்யேக சிப் எடுத்து செய்யும்போது, மெயின் ப்ராசஸர் (Exynos 2600 அல்லது Snapdragon 8 Elite Gen 5) அதிகமா உழைக்க வேண்டியதில்லை. அதனால, மொபைல் சூடாவதையும் (Thermal Performance) குறைக்க முடியும், அதேசமயம் கேம்ஸ் இல்லன்னா ஹெவியான அப்ளிகேஷன்ஸ் யூஸ் பண்ணும்போது நமக்கு ஃபாஸ்ட்டான பெர்ஃபாமன்ஸ் கிடைக்கும்.

இதே மாதிரிதான், Apple நிறுவனமும் அவங்களுடைய ஐபோன்களில் (iPhone 17 சீரிஸ்) N1 என்ற ஒரு பிரத்யேக வயர்லெஸ் நெட்வொர்க்கிங் சிப்-ஐ பயன்படுத்தி இருக்காங்க. இப்போ Samsung-ம் அதே பாணியில இந்த டெக்னாலஜிய கொண்டு வர்றது, கனெக்டிவிட்டி மற்றும் பேட்டரி லைஃப்-ல சாம்சங் இன்னும் அதிகமா கவனம் செலுத்துறாங்கனு காட்டுது.

Galaxy S26 சீரிஸ் பத்தி மற்ற தகவல்கள்

Galaxy S26 சீரிஸ் மாடல்கள் Exynos 2600 மற்றும் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்டுகளின் கலவையா வரும்னு எதிர்பார்க்கப்படுது. S26 Ultra மாடல் 200-மெகாபிக்சல் கேமரா, 6.9-இன்ச் டிஸ்பிளே மற்றும் 5,000mAh பேட்டரியோட வர வாய்ப்பிருக்கு. இந்த புது கனெக்டிவிட்டி சிப் மூலமா, வயர்லெஸ் பெர்ஃபாமன்ஸ் இன்னும் சிறப்பாக இருக்கும்னு நம்பலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.
...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OPPO Find X9, Dimensity 9500 உடன் கூடிய Find X9 Pro அறிவிக்கப்பட்டது: விலை, விவரக்குறிப்புகள்
  2. Realme C85 Pro Geekbench Listing! 7000mAh பேட்டரி, Snapdragon 685: விலை செக் பண்ணுங்க!
  3. S26 சீரிஸ்ல Samsung-ன் மாஸ்டர் பிளான்! Bluetooth 6.1 சப்போர்ட்டுடன் Exynos S6568 சிப்!
  4. iQOO Neo 11 வருகிறான்! 7500mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே-னு வெறித்தனம் அக்டோபர் 30 லான்ச்
  5. Redmi Turbo 5-ன் புதிய லீக்! 1.5K டிஸ்பிளே, IP68 ரேட்டிங்: Poco X8 Pro-வா இந்தியாவுக்கு வரும்?
  6. DSLR-க்கு டஃப் கொடுக்க Vivo ரெடி! Zeiss-உடன் கைகோத்து Vivo X300 சீரிஸ் இந்தியாவிற்கு வருது
  7. OnePlus-ன் கேமிங் ராட்சசன் வந்துட்டான்! 7,800mAh பேட்டரி பவர்! 165Hz டிஸ்ப்ளே! OnePlus Ace 6-ன் அம்சங்கள் என்னென்ன?
  8. ஒன்பிளஸ் 15 வந்துவிட்டது! பேட்டரி வேற லெவல்! 7300mAh பேட்டரி பவர் விலையும், ஸ்பெக்ஸ்ஸும் பார்க்கலாமா?
  9. கேமராவில் புரட்சி! 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் உடன் Xiaomi 17 Ultra வரப்போகுது
  10. அல்ட்ரா-ஸ்லிம் செக்மென்ட்டில் Motorola-வின் புதிய ஆட்டம்! Moto X70 Air இந்திய லான்ச் டீஸ் ஆகி இருக்கு! விலை ₹30,000-க்குள் இருக்குமா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.