சாம்சங் Galaxy S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் புதிய Exynos S6568 என்ற கனெக்டிவிட்டி சிப் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
Photo Credit: Samsung
Galaxy S26 Series: Exynos S6568, Bluetooth 6.1, மேம்பட்ட செயல்திறன்
Samsung ரசிகர்கள் எல்லாரும் ரொம்பவே எதிர்பார்த்துட்டு இருக்க விஷயம், அடுத்த வருஷம் வரப்போற Galaxy S26 சீரிஸ் தான். அந்த சீரிஸ் பத்தி தான் இப்போ ஒரு சூப்பரான தகவல் வெளியாகி இருக்கு. சாதாரணமா ஸ்மார்ட்போன்ல ப்ராசஸர் இருக்கும். அது தான் போனோட எல்லா வேலையையும் பார்க்கும். ஆனா, Samsung இப்போ Galaxy S26 சீரிஸ்ல, மெயின் ப்ராசஸரோட சேர்ந்து வேலை செய்யற மாதிரி, கனெக்டிவிட்டிக்காகவே தனியா ஒரு Exynos சிப்-ஐ கொடுக்கப் போறாங்கனு லீக் தகவல் சொல்லுது.
சமீபத்துல Exynos S6568 என்ற ஒரு புதிய சாம்சங் சிப்செட், Bluetooth SIG-வோட (Special Interest Group) வெப்சைட்டில் லிஸ்ட் ஆகியிருக்கு. அந்த லிஸ்டிங்கில், இந்த சிப் ஒரு "Bluetooth மற்றும் Wi-Fi கம்பானியன் சிப்"-ஆ இருக்கும்னு குறிப்பிடப்பட்டிருக்கு. அதாவது, இது மெயின் ப்ராசஸரோட (அது வரப்போகும் Exynos 2600-ஆ இருக்கலாம்) சேர்ந்து, வயர்லெஸ் கனெக்டிவிட்டிக்கான எல்லா வேலைகளையும் செய்யுமாம்.
இந்த Exynos S6568 சிப்போட முக்கியமான ஹைலைட் என்னன்னா, இது லேட்டஸ்ட் ஆன Bluetooth 6.1 ஸ்டாண்டர்டுக்கு சப்போர்ட் பண்ணுது. Bluetooth 6.1-ஆ? அதுல என்ன பெரிய விஷயம்னு கேட்குறீங்களா? முந்தைய வெர்ஷனை விட இதுல பாதுகாப்பு (Security) அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கும், முக்கியமா பவர் எஃபிஷியன்ஸி (Power Efficiency) ரொம்பவே நல்லா இருக்கும். அதாவது, பேட்டரி சார்ஜ் அதிகமா நிற்குறதுக்கு இது ரொம்பவே உதவியா இருக்கும்.
இன்னும் ஒரு முக்கிய விஷயம் என்னன்னா, Wi-Fi மற்றும் Bluetooth கனெக்டிவிட்டி வேலைகளை இந்த பிரத்யேக சிப் எடுத்து செய்யும்போது, மெயின் ப்ராசஸர் (Exynos 2600 அல்லது Snapdragon 8 Elite Gen 5) அதிகமா உழைக்க வேண்டியதில்லை. அதனால, மொபைல் சூடாவதையும் (Thermal Performance) குறைக்க முடியும், அதேசமயம் கேம்ஸ் இல்லன்னா ஹெவியான அப்ளிகேஷன்ஸ் யூஸ் பண்ணும்போது நமக்கு ஃபாஸ்ட்டான பெர்ஃபாமன்ஸ் கிடைக்கும்.
இதே மாதிரிதான், Apple நிறுவனமும் அவங்களுடைய ஐபோன்களில் (iPhone 17 சீரிஸ்) N1 என்ற ஒரு பிரத்யேக வயர்லெஸ் நெட்வொர்க்கிங் சிப்-ஐ பயன்படுத்தி இருக்காங்க. இப்போ Samsung-ம் அதே பாணியில இந்த டெக்னாலஜிய கொண்டு வர்றது, கனெக்டிவிட்டி மற்றும் பேட்டரி லைஃப்-ல சாம்சங் இன்னும் அதிகமா கவனம் செலுத்துறாங்கனு காட்டுது.
Galaxy S26 சீரிஸ் மாடல்கள் Exynos 2600 மற்றும் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட்டுகளின் கலவையா வரும்னு எதிர்பார்க்கப்படுது. S26 Ultra மாடல் 200-மெகாபிக்சல் கேமரா, 6.9-இன்ச் டிஸ்பிளே மற்றும் 5,000mAh பேட்டரியோட வர வாய்ப்பிருக்கு. இந்த புது கனெக்டிவிட்டி சிப் மூலமா, வயர்லெஸ் பெர்ஃபாமன்ஸ் இன்னும் சிறப்பாக இருக்கும்னு நம்பலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Take-Two CEO Says AI Won't Be 'Very Good' at Making a Game Like Grand Theft Auto
iQOO Neo 11 With 7,500mAh Battery, Snapdragon 8 Elite Chip Launched: Price, Specifications