ப்ரீமியம் போன் வாங்க ஆசைப்படுறீங்களா? Flipkart-ல் Samsung Galaxy S25 Ultra-வின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
Photo Credit: Samsung
Samsung Galaxy S26 Ultra வெளியீட்டு கசிவுகள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியாகி வருகின்றன.
"ஐபோன் வேணுமா இல்ல சாம்சங் வேணுமா?"-னு குழப்பத்துல இருந்தவங்களுக்கு, சாம்சங் ஒரு தரமான பதிலைக் கொடுத்திருக்கு. ஆமாங்க, பிளிப்கார்ட்ல இப்போ சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மேல ஒரு செம அதிரடி விலை குறைப்பு வந்திருக்கு. சாதாரணமா இந்த போனோட லான்ச் பிரைஸ் ₹1,29,999. ஆனா இப்போ Flipkart-ல இருக்குற 'Buy Buy 2025' சேல்ல, இதோட விலை ஸ்ட்ரெயிட்டா ₹1,09,000-க்கு வந்துடுச்சு. அதாவது எந்த ஆஃபரும் இல்லாமலே ₹20,000 வரைக்கும் கம்மியா இருக்கு. ஆனா இது வெறும் ஆரம்பம்தான் பாஸ்!
உங்ககிட்ட Flipkart Axis Bank இல்லன்னா SBI கிரெடிட் கார்டு இருந்தா, இன்னும் ஒரு ₹4,000 வரைக்கும் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும். இதுபோக உங்க பழைய போனை எக்ஸ்சேஞ்ச் பண்ணி கொடுத்தா, அந்த போனோட கண்டிஷனை பொறுத்து ₹60,000 வரைக்கும் கூட வேல்யூ கிடைக்கும்னு சொல்றாங்க. எல்லா ஆஃபரையும் தட்டித்தூக்குனா, இந்த பிரீமியம் போனை நீங்க ₹80,000 பட்ஜெட்ல கூட நெருங்கிடலாம்.
S25 அல்ட்ரா-வை ஏன் 'பெஸ்ட் ஆண்ட்ராய்டு போன்'-னு சொல்றாங்கன்னா, இதுல இருக்குற Snapdragon 8 Elite சிப்செட் அப்படி ஒரு பவர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கும். அப்புறம் நம்ம ஊர்ல போட்டோ எடுக்குறதுக்கு இதைவிட ஒரு கெத்தான கேமரா கிடையாது. 200MP மெயின் கேமரா மூலமா நீங்க எடுக்குற போட்டோஸ் எல்லாம் வேற லெவல்ல இருக்கும். 100x ஜூம் வசதி, AI போட்டோ எடிட்டிங்னு சாம்சங் இதுல ஏகப்பட்ட வித்தைகளை இறக்கி இருக்காங்க.
S26 சீரிஸ் வர்றதுக்கு முன்னாடி, இப்போ இருக்குற டாப் மாடலை கம்மி விலையில பிடிக்க இது ஒரு சூப்பர் சான்ஸ். நீங்க ஒரு போட்டோகிராபி லவ்வர் இல்லன்னா மாஸா ஒரு போன் வச்சுக்கணும்னு நினைக்கிறீங்கன்னா, இந்த ஆஃபரை விட்டுடாதீங்க. ஸ்டாக் இருக்குற வரைக்கும் தான் இந்த விலை இருக்கும்னு பிளிப்கார்ட் சொல்லுது. நீங்க ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை விட இந்த S25 அல்ட்ரா பெஸ்ட்-னு நினைக்கிறீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க,
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Magnetic Control of Lithium Enables Safer, High-Capacity “Dream Battery” Without Explosion Risk