Photo Credit: Samsung
Samsung Galaxy S25 Ultra ஜனவரியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை வழக்கமான மூன்று மாடல்களை விட நான்கு மாடல்களாக அறிமுகம் ஆகிறது. Galaxy S25, Galaxy S25+, Galaxy S25 Ultra மற்றும் Galaxy S25 Slim என நான்கு செல்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. டாப்-ஆஃப்-தி-லைன் மாடலான கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா மாடல் பாக்ஸி வடிவமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டிருக்கலாம். சமீபத்தில் வெளிவந்த செல்போனின் டம்மி யூனிட்கள் இந்த மாற்றத்தை உறுதிப்படுத்துகின்றன. Galaxy S25 Ultra இந்த முறை வட்டமான தோற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது. தற்போதுள்ள Galaxy S24 Ultra உடன் ஒப்பிடும்போது வடிவமைப்பு மாற்றத்தை கண்டுள்ளது.
Samsung Galaxy S25 Ultra மாடலின் படங்கள் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. மடிக்க முடியாத ஸ்மார்ட்போன் வடிவமைப்பு என்பதை அவை உறுதிபடுத்தி உள்ளன. இதில் தட்டையானதை விட வட்டமான விளிம்புகள் அதிகமாக இருக்கும். நான்கு வண்ணங்களில் Samsung Galaxy S25 Ultra செல்போன் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கேலக்ஸி எஸ் 25 அல்ட்ராவின் டம்மி டிசைன் மாடல்கள் அதன் மாற்றப்பட்ட வடிவமைப்பைக் காட்டுவது இது இரண்டாவது முறையாகும். சமீபத்திய ஆண்டுகளில் சாம்சங்கின் அல்ட்ரா மாடல்கள் பாக்ஸி வடிவமைப்பிலிருந்து விலகிச் செல்வது தெளிவாக தெரிகிறது. இருப்பினும், இது தற்போதைய மாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட சிலவடிவமைப்பு கூறுகளைக் கொண்டிருக்கிறது. இதில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்களை வலது பக்கம் வைப்பது, ஒரே மாதிரியான பின்புற கேமரா யூனிட் ஆகியவை அடங்கும்.
Samsung Galaxy S25 Ultra ஆனது 6.86-இன்ச் AMOLED திரையுடன் வரும். இதில் முந்தைய மாடல்களை விட மெல்லிய பெசல்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 200-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 10-மெகாபிக்சல் 3x டெலிஃபோட்டோ கேமரா, 50-மெகாபிக்சல் 5x டெலிஃபோட்டோ கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இது குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 16ஜிபி வரை ரேம் சப்போர்ட் உள்ளது. 45W சார்ஜிங் சப்போர்ட் ஈடான 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும். சமீபத்திய அறிக்கையின்படி Samsung Galaxy S25 Ultra முந்தைய மாடல்களை விட விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் சந்தைகளில் இன்னும் விலை அதிகமாக இருக்கும் என தெரிகிறது. இரட்டை 4G VoLTE, 5G, Wi-Fi, GPS, Bluetooth, Glonass, QZSS மற்றும் USB Type-C போர்ட் அகியவை, விவோவின் புதிய போனின் இணைப்பு ஆப்ஷன்கள் ஆகும். இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Samsung நிறுவனம்.
இந்த மாடல் Galaxy AI அம்சங்களுக்கான உள்ளமைக்கப்பட்ட ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது புகைப்படம் எடுத்தல், பேட்டரி மேலாண்மை மற்றும் பிற பயனர் அனுபவங்களில் செயல்பாட்டை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்