சாம்சங் கேலக்ஸி S25 பிளஸ் 5G மொபைலை மிகக்குறைந்த விலையில் வாங்க இதுவே சரியான நேரம். அமேசான் வழங்கும் இந்த மெகா தள்ளுபடி குறித்த முழு விவரங்கள்
Photo Credit: Samsung
தள்ளுபடி, விலை குறைவு, Snapdragon 8 Elite, 4900mAh பேட்டரி, பேங்க் குறைப்பு, அதிக எக்ஸ்சேஞ்ச்
நீங்க ஒரு பிரீமியம் ஃபிளாக்ஷிப் போன் வாங்கணும், ஆனா பட்ஜெட் கொஞ்சம் இடிக்குதுன்னு கவலைப்பட்டுட்டு இருந்தீங்கன்னா, இதோ உங்களுக்கான ஒரு சூப்பர் சர்ப்ரைஸ். சாம்சங் (Samsung) நிறுவனத்தோட பவர்ஃபுல் மொபைலான Galaxy S25 Plus 5G விலையை அமேசான் இப்போ அதிரடியா குறைச்சிருக்காங்க.
இந்த போன் இந்தியாவுல லான்ச் ஆனப்போ இதோட விலை ₹99,999. ஆனா இப்போ எந்த ஒரு பேங்க் கார்டும் இல்லாமலே அமேசான்ல இது ₹69,799-க்கு லிஸ்ட் ஆகியிருக்கு. அதாவது நேரடியா உங்களுக்கு ₹30,200 தள்ளுபடி கிடைக்குது. இதுமட்டும் இல்லாம, சில குறிப்பிட்ட பேங்க் கார்டுகளை யூஸ் பண்ணா உங்களுக்கு கூடுதலா ₹1,500 வரை தள்ளுபடி கிடைக்கும். இதனால இந்த போனோட விலை சுமார் ₹68,299-க்கு குறையுது.
நீங்க உங்க பழைய போனை எக்ஸ்சேஞ்ச் பண்ண ரெடியா இருந்தா, அமேசான் இதுக்கு ₹44,400 வரைக்கும் எக்ஸ்சேஞ்ச் வேல்யூ தர்றாங்க. உங்க பழைய போன் நல்ல கண்டிஷன்ல இருந்தா, இந்த S25 பிளஸ் போனை நீங்க கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத கம்மி விலையில வாங்கிடலாம்.
இதுல Snapdragon 8 Elite for Galaxy சிப்செட் இருக்கு. இதனால கேமிங் முதல் மல்டி-டாஸ்கிங் வரை எல்லாமே மின்னல் வேகத்துல இருக்கும். 6.7-இன்ச் Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே இருக்கு, இதுல வீடியோ பார்க்குறது ஒரு வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸா இருக்கும். கேமராவை பொறுத்தவரை 50MP மெயின் கேமரா, 12MP அல்ட்ராவைடு மற்றும் 10MP டெலிபோட்டோ லென்ஸ்னு ஒரு கம்ப்ளீட் செட்டப் இருக்கு.
4900mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோட வர்ற இந்த போன்ல சாம்சங்கோட லேட்டஸ்ட் Galaxy AI வசதிகளும் இருக்கு. புதுசா வர்ற S26 சீரிஸ்க்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காதுன்னு சொல்லப்படுறதால, இப்போ இந்த ஆஃபர்ல S25 பிளஸ் வாங்குறது ஒரு புத்திசாலித்தனமான முடிவா இருக்கும். இந்த ஆஃபர் ஸ்டாக் இருக்குற வரைக்கும் தான் இருக்கும்னு சொல்லிருக்காங்க. சோ, லேட் பண்ணாம அமேசான் வெப்சைட்ல செக் பண்ணி பாருங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்