Photo Credit: Samsung
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy S25 மற்றும் Galaxy S25+ செல்போன்கள் பற்றி தான்
Samsung Galaxy S25 மற்றும் Galaxy S25+ செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது.இரண்டு மாடல்களும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்பில் இயக்கப்படுகிறது. Galaxy Unpacked விழாவில் இந்த இரண்டு செல்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டன. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப் மூலம் இவை இயக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் கேலக்ஸி AI அம்சங்களுக்கான சப்போர்ட் இரண்டிலும் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 25 மற்றும் கேலக்ஸி எஸ் 25+ ஆகியவற்றை மூன்று பின்புற கேமரா யூனிட் கொண்டுள்ளன. இது 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் நிறுவனத்தின் One UI 7 மூலம் செயல்படுகிறது. ஆண்ட்ராய்டு 15 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்குகின்றன.
கேலக்ஸி எஸ் 25 சீரிஸ் புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்களை சப்போர்ட் செய்யும் என சாம்சங் நிறுவனம் கூறுகிறது. பயன்பாடுகளில் Google Gemini அம்சங்களையும் பயனர்கள் அணுகலாம். கேலக்ஸி எஸ்25 சீரிஸ் ஏழு வருட OS மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை பெற உள்ளது.
Samsung Galaxy S25 விலையானது 12GB RAM மற்றும் 128GB மெமரியுடன் கூடிய பேஸிக் மாடல் ரூ. 69,100 விலையில் தொடங்குகிறது. 12ஜிபி+256ஜிபி மற்றும் 12GB+512GB மெமரி மாடல்களும் கிடைக்கிறது. அவைகள் முறையே ரூ. 74,300 மற்றும் ரூ. 80,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம், Samsung Galaxy S25+ ஆனது 12GB RAM மற்றும் 256GB மெமரியுடன் கூடிய மாடல் ரூ. 86,400 ஆகும். 12GB+512GB மாடல் 96,700 ரூபாய்.
கேலக்ஸி எஸ் 25 மாடல் ஐசி ப்ளூ, புதினா, நேவி மற்றும் சில்வர் ஷேடோ வண்ண விருப்பங்களில் விற்கப்படும் என்று சாம்சங் கூறுகிறது. அதே நேரத்தில் சாம்சங் தளம் வழியாக பிரத்தியேகமான புளூபிளாக், கோரல்ரெட் மற்றும் பிங்க்கோல்ட் வண்ணங்களில் கிடைக்கும். இந்த கைபேசிகள் இன்று முன்கூட்டிய ஆர்டர் செய்ய கிடைக்கும். பிப்ரவரி 7 முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும்.
Galaxy S25 ஐ 6.2-இன்ச் Full-HD+ திரையை கொண்டுள்ளது. Galaxy S25+ ஆனது 6.7-இன்ச்டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இரண்டு மாடல்களிலும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.Samsung Galaxy S25 ஆனது 25W இல் சார்ஜ் செய்யக்கூடிய 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Galaxy S25+ ஆனது 45W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் பெரிய 4,900mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்