மாஸ்சா வந்துட்டான் Samsung Galaxy S24 FE! இனி எல்லாமே மெர்சல்

Samsung Galaxy S24 FE வளைந்த விளிம்புகளுடன் மிக அழகான டிசைனில் வந்துள்ளது

மாஸ்சா வந்துட்டான் Samsung Galaxy S24 FE! இனி எல்லாமே மெர்சல்
ஹைலைட்ஸ்
  • 6.65 இன்ச் டிஸ்பிளே, மூன்று முன்பக்க கேமரா
  • Snapdragon 8 Gen 3 மைக்ரோ சிப்புடன் வருகிறது
  • கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய செய்ய செம்ம மாஸ்சாக இருக்கும்.
விளம்பரம்

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டே அதிரும்படி Samsung Galaxy S24 FE சீரியஸ் போன்களின் ப்ரீ-புக்கிங் அதிகரித்துள்ளது. அந்த வகையில் விற்பனையில் சக்கைபோடு போட்ட சாம்சங் கேலக்ஸி மாடலின் S24 FE எடிசன் விரைவில் வெளியாக இருக்கிறது. பல எதிர்பாராத அம்சங்கள் Samsung Galaxy S24 FE மாடலில் இருக்கிறது. FE என்றால் Fan Editition  என்று சொல்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 6.65 இன்ச் டிஸ்பிளேவுடன்  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய செய்ய செம்ம மாஸ்சாக இருக்கும்.

இந்தியாவில் Samsung Galaxy S24 FE மாடல் ரூபாய் 59,999க்கு அறிமுகம் ஆகும் என தெரிகிறது. 8 ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.65 இன்ச் அளவிலான அமோஎல்இடி டிஸ்பிளே இருக்கலாம். பவர்புலான Snapdragon 8 Gen 3 சிப்செட் இருப்பதால் கேமிங், வீடியோ எடிட்டிங் என அனைத்து பயன்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கும். 

இதுதவிர, Samsung Galaxy S24 FE  வேரியண்ட் Exynos 2400 SoC சிப் மூலம் இயங்கும் என தெரிகிறது. இதனால் வேகம் பக்காவாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி S23 FE மாடலில் உள்ளதை போலவே 4500 எம்ஏஎச் பேட்டரி இருக்கலாம் என தெரிகிறது. இது ஒருநாள் முழுக்க தாக்குபிடிக்க உதவும். கேமராக்கள் வடிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

கூடுதலாக டிரிபிள் ரியர் கேமரா யூனிட், அதில் OIS எனப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.  50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர், 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, முன்பக்கத்தில் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது.

வெளிப்புற பட்டன்களை பொறுத்தவரையில் வழக்கம் போல வலது பக்கம் வால்யூம் பட்டன்கள் மற்றும் பவர் கீ இருக்கிறது. அதே சமயம் கீழ் பேனலில் USB Type C போர்ட் மற்றும் சிம் ட்ரே ஸ்லாட் இருப்பது போல் தெரிகிறது. இடது பக்கம் எந்த டிசைனும் இருப்பது போல தெரியவில்லை. ஆகமொத்தத்தில் செல்போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இந்த Samsung Galaxy S24 FE விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

ces_story_below_text

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. பழைய லேப்டாப்பை மாத்த இதுதான் சரியான நேரம்! அமேசான் சேலில் HP Omnibook 5 மற்றும் Lenovo Yoga Slim 7 அதிரடி விலையில்
  2. துணிஞ்சு நனைக்கலாம்.. எவ்வளவு வேணா பேசலாம்! 7000mAh பேட்டரி மற்றும் IP69 ரேட்டிங்குடன் மிரட்டலாக வந்த OPPO A6 5G
  3. பழைய நினைவுகளைப் புதுப்பிக்க ஒரு 'சினிமா' டச்! ஃபுஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் மினி ஈவோ சினிமா லான்ச்! செம ஸ்டைலிஷ் லுக்
  4. பேக்கிங், கிரில்லிங், ரீ-ஹீட்டிங் - எல்லாம் ஒரே மெஷின்ல! அமேசான் சேலில் ₹4,990 முதல் பிராண்டட் மைக்ரோவேவ் ஓவன்கள்! டாப் டீல்கள் இதோ
  5. வெயில் காலம் வருது.. புது பிரிட்ஜ் ரெடியா? அமேசான் சேலில் LG, Samsung, Haier டபுள் டோர் மாடல்கள் அதிரடி விலையில்! டாப் டீல்கள் இதோ
  6. ஸ்பீடு தான் முக்கியம்! அமேசான் சேலில் ₹20,000-க்குள் மிரட்டலான லேசர் பிரிண்டர் டீல்கள்! ₹39,000 வரை தள்ளுபடி
  7. மோட்டோ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! G67 மற்றும் G77 ஸ்மார்ட்போன்களின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் லீக்
  8. மக்களின் சாய்ஸ் மாறுதா? 2025-ல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை நிலவரம் வெளியானது! Vivo கிங்.. Apple மிரட்டல் வளர்ச்சி
  9. வெயில் காலத்துக்கு இப்போவே ரெடி ஆகணுமா? அமேசான் சேலில் ₹26,440 முதல் பிராண்டட் ஏசிகள்! மிஸ் பண்ணக்கூடாத டாப் டீல்கள் இதோ
  10. பட்ஜெட் விலையில் ஒரு பக்கா வாஷிங் மெஷின்! அமேசான் சேலில் ₹13,490 முதல் டாப் லோடிங் மாடல்கள்! வங்கி சலுகைகளுடன் அதிரடி
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »